டெல்லியில் சிஜேபி நிறுவனர் அபிஜித் தீப்கே மீண்டும் தடுத்து வைப்பு
'காக்ரோச் ஜனதா கட்சி'யின் நிறுவனர் அபிஜித் தீப்கேவை, வெள்ளிக்கிழமையான அக்டோபர் 16-ஆம் தேதி டெல்லி காவல்துறையினர் தடுப்புக்காவலில் எடுத்தனர்.
அபிஜீத் தீப்கே தடுத்து வைக்கப்பட்டதைக் காட்டும் காணொளியைச் செய்தி நிறுவனமான ஏஎன்ஐ வெளியிட்டுள்ளது. அதில், அவரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தடுத்து வைப்பதாகக் காவல்துறை அதிகாரிகள் கூறுவதைக் கேட்க முடிகிறது.
அதற்கு திப்கே பதிலளிக்கையில், தான் எந்த சட்டத்தையும் மீறவில்லை என்றும் தன்னை எப்படி தடுப்புக்காவலில் எடுக்க முடியும் என்றும் காவல்துறை அதிகாரியிடம் கேட்டார்.
அக்டோபர் 16-ஆம் தேதி டெல்லியின் கனாட் பிளேஸ் பகுதியில் உள்ள சென்ட்ரல் பூங்காவில், 'லெஹ்ரா தோ திரங்கா' (தேசியக் கொடியைப் பறக்கவிடுவோம்) என்ற பெயரில் போராட்டம் நடத்த 'காக்ரோச் ஜனதா கட்சி' அழைப்பு விடுத்திருந்தது.
எனினும், இந்தப் போராட்டத்துக்கு புதுடெல்லி நகராட்சி மன்றமான என்டிஎம்சி அனுமதி வழங்கவில்லை.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



