சந்திரயான் 3: விடாமல் மீண்டும் முயலும் இந்தியா - இந்த முறை வெற்றி கிடைக்குமா?
இந்திய விண்வெளி ஆய்வு வரலாற்றில் மிகவும் பிரமாண்டமான முயற்சியை இஸ்ரோ வெற்றிகரமாகத் தொடங்கியுள்ளது. சந்திரயான் -3 விண்கலம் ஜூலை 14 ஆம் தேதி மதியம் 2:35 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.
இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேசுகையில், சந்திரயான் திட்டத்தின் பின்னணியில் உள்ள இஸ்ரோ குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துத் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய சோம்நாத், 'எல்விஎம் 3-எம்4 ராக்கெட் சந்திரயான் 3 விண்கலத்தை துல்லியமான சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.

பட மூலாதாரம், ISRO
எல்விஎம் 3-எம்4 ராக்கெட்டின் மூன்று அடுக்குகள் வெற்றிகரமாக பிரிந்ததையடுத்து, நிலவை நோக்கிய பயணத்தை சந்திரயான் 3 வெற்றிகரமாகத் தொடங்கியுள்ளது.
சந்திரயான் 3 விண்ணில் ஏவப்பட்டது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோதி, ''சந்திரயான்-3 இந்திய விண்வெளி வரலாற்றில் புதிய அத்தியாயத்தை எழுதுகிறது.
இது ஒவ்வொரு இந்தியரின் கனவுகளையும் லட்சியங்களையும் உயர்த்துகிறது. இந்த முக்கிய சாதனை நம் விஞ்ஞானிகளின் அயராத அர்ப்பணிப்புக்கு சான்று'' எனக் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரோவின் விண்வெளிப் பரிசோதனைகளிலேயே 'மிகவும் சிக்கலான சோதனைகள்' என சந்திரயான் திட்டங்களைச் சொல்லலாம்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



