You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சல்மான் கானுக்கு இடைஞ்சல், கனடாவிலும் சர்ச்சை - யார் இந்த லாரன்ஸ் பிஷ்னோய்?
தேசியவாதக் காங்கிரஸ் கட்சியின் (என்.சி.பி) தலைவரும், மகாராஷ்டிரா அரசியலில் நன்கு அறியப்பட்டவருமான பாபா சித்தீக்கி (66), கடந்த சனிக்கிழமை இரவு சுட்டுக் கொல்லப்பட்டார்.
நீண்ட காலமாக காங்கிரஸுடன் இணக்கமாக இருந்த பாபா சித்தீக்கி, 2004 முதல் 2008 வரை மகாராஷ்டிராவில் காங்கிரஸ்-என்.சி.பி அரசில் இணை அமைச்சராக இருந்தார். பாலிவுட் நடிகர்கள் ஷாருக் கானுக்கும் சல்மான் கானுக்கும் இடையே இருந்த கசப்பான உறவை முடிவுக்கு கொண்டு வந்ததற்காகவும் பாபா சித்தீக்கி அறியப்பட்டார்.
சித்தீக்கி கொலையில் 3 துப்பாக்கிதாரிகள் ஈடுபட்டதை மும்பை போலீசார் உறுதி செய்துள்ளனர். அவர்களுக்கும் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலுக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 13) அன்று, ‘பாபா சித்தீக்கி கொலையில் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலுக்கு தொடர்பு இருப்பதாக’ கூறப்படுவது குறித்து மும்பை காவல்துறை குற்றப்பிரிவு டி.சி.பி தத்தா நலவாடேவிடம் பத்திரிகையாளர்கள் கேட்டபோது, எல்லா கோணங்களிலும் விசாரணை நடத்தப்படும் என்று அவர் கூறினார்.
யார் இந்த லாரன்ஸ் பிஷ்னோய்?
மேலும் விவரங்கள் காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)