You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கீழடி வரலாற்றை இந்திய அரசு இன்னும் ஏற்காதது ஏன்?
இந்திய அரசு ஏன் இன்னும் கீழடி வரலாறு தொடர்பான அறிக்கையை ஏற்கவில்லை என்ற கேள்விக்குப் பதிலளித்த இந்திய கலாசாரத் துறை அமைச்சர் கஜேந்திர சிங், "நீங்கள் சொல்லும் அந்த அறிக்கை அறிவியல்பூர்வமாக இல்லை" என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், "நீங்கள் குறிப்பிடும் கண்டுபிடிப்புகள் பற்றி எனக்குத் தெரியும். ஆனால் அவை இன்னும் தொழில்நுட்ப ரீதியாக வலுவாக நிறுவப்படவில்லை. அந்த ஆய்வை மேற்கொண்ட தொல்பொருள் ஆராய்ச்சியாளரால் முன்வைக்கப்பட்ட கண்டுபிடிப்புகளுக்கு அங்கீகாரம் வழங்குவதற்கு முன் பல விஷயங்கள் செய்யப்பட வேண்டும். கூடுதல் முடிவுகள், கூடுதல் தரவுகள், கூடுதல் ஆதாரங்களை அவர்கள் கொண்டு வரட்டும். ஏனென்றால் ஒரேயொரு கண்டுபிடிப்பு மட்டுமே விஷயத்தை மாற்ற முடியாது" என்று கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு