இரான் மீது அமெரிக்கா வீசிய எம்ஓபி குண்டு எவ்வாறு வேலை செய்யும்?
இஸ்ரேல் - இரான் இடையேயான மோதல் தீவிரமடையும் நிலையில், இரானில் உள்ள 3 அணுசக்தி தளங்கள் மீதும் அமெரிக்கா திடீர் தாக்குதல் நடத்தி உள்ளது.
இரானில் உள்ள ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் உள்ளிட்ட 3 அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலில் மாசிவ் ஆர்ட்னன்ஸ் பெனட்ரேட்டர் (Massive Ordnance Penetrator) எனப்படும் MOP ஆயுதம் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
நிலத்தடியில் இருந்த அந்த அணுசக்தி தளத்தை தகர்க்கும் திறன் கொண்ட பங்கர் பஸ்டர் குண்டு அமெரிக்காவிடம் மட்டுமே உள்ளது.
ஆம், GBU-57A/B Massive Ordnance Penetrator (MOP) எனப்படும் உலகின் மிகப்பெரிய அணுஆயுதம் அல்லாத "பங்கர் பஸ்டர்" குண்டு அமெரிக்காவிடம் மட்டுமே உள்ளது.
சரி GBU-57 குண்டு என்ன செய்யும்? அதை எவ்வாறு பயன்படுத்த முடியும்? என்பதை இந்தக் காணொளியில் பார்ப்போம்
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



