மணிப்பூரில் பெண்களை நிர்வாணமாக்கி இழுத்துச் சென்ற கொடூரமான காணொளி - என்ன நடந்தது?

காணொளிக் குறிப்பு, மணிப்பூரில் பெண்களை நிர்வாணமாக்கி இழுத்துச் சென்ற கொடூரமான காணொளி - என்ன நடந்தது?
மணிப்பூரில் பெண்களை நிர்வாணமாக்கி இழுத்துச் சென்ற கொடூரமான காணொளி - என்ன நடந்தது?
பிரசுரிக்கப்பட்டது

கடந்த இரண்டரை மாதங்களாக மணிப்பூரில் உள்ள மெய்தேய் மற்றும் குகி சமூகத்தினருக்கு இடையே வன்முறை மோதல்கள் நிலவி வரும் நிலையில், இரண்டு மணிப்பூர் பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்ற கொடூரமான வீடியோ புதன்கிழமை வெளியாகியுள்ளது.

இந்த வீடியோவை உறுதி செய்த மணிப்பூர் காவல்துறை, மணிப்பூர் மாநிலம் தௌபல் மாவட்டத்தில் மே மாதம் 4ஆம் தேதி இந்த பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக கூறியுள்ளனர்.

இது குறித்து மணிப்பூர் போலீசார் கூறுகையில், "இந்த சம்பவம் மே 4ம் தேதி நடந்தது. இந்த வழக்கில், அடையாளம் தெரியாத நபர்கள் மீது கடத்தல், கூட்டு பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் விசாரணை தொடங்கியுள்ளது. குற்றவாளிகளை பிடிக்க போலீசார் முழு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்." என்று கூறுகின்றனர்.

மணிப்பூர்

பட மூலாதாரம், Getty Images

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: