குரங்குக்கு பாலூட்ட கற்றுக்கொடுத்த பெண்
அமெரிக்காவின் வெர்ஜினியா மகாணத்தில் உள்ள மெட்ரோ ரிச்மன்ட் மிருகக்காட்சி சாலையின் பணியாளர் ஒருவர், ஒராங்குட்டான் குரங்குக்கு தாய்பாலூட்ட கற்றுக் கொடுத்துள்ளார்.
அண்மையில் குட்டி ஈன்ற 'ஜோயி' என்ற ஒராங்குட்டான் குரங்குக்கு உதவும் வகையில், தன் குழந்தையை அழைத்து வர விட்லி ஒப்புக் கொண்டார்.
ஜோயி பிறந்து 9 மாதத்திலேயே தாயிடம் இருந்து பிரிந்ததால், குட்டிக்கு எப்படி பாலூட்டுவது என்று அந்த ஒராங்குட்டான் குரங்கு கற்றுக் கொள்ளவில்லை.
விட்லி செயல்விளக்கம் கொடுத்த பிறகு, விரைவிலேயே தனது குட்டிக்கு பாலூட்ட கற்றுக் கொண்டது ஜோயி. ஆனால் விட்லி மூலமாக மட்டுமல்லாது, வேறு சில முறைகள் மூலமாகவும் அந்த குரங்குக்கு பாலூட்ட கற்றுக் கொடுத்தது மிருகக்காட்சி சாலை.
ஒராங்குட்டான் குரங்குகள் தனது குட்டிகளுக்கு பாலூட்டும் வீடியோ, ஒராங்குட்டான் பொம்மையை வைத்து குட்டியை எப்படி சுமக்க வேண்டும் என பல வழிகளில் ஜோயிக்கு கற்றுக் கொடுக்கப்பட்டது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



