அதி கனமழை இனி அடிக்கடி பெய்யலாம் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

அதி கனமழை இனி அடிக்கடி பெய்யலாம் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
பிரசுரிக்கப்பட்டது

அதிகனமழை காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.

சமீபத்தில் தான் மிக்ஜாம் புயலால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் அருகில் உள்ள மாவட்டங்கள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது தென் மாவட்டங்களில் கடுமையான மழை பெய்து வருகிறது. இதனால், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பல அணைகள் நிரம்பி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் குடியிருப்பு பகுதிகள் மற்றும் பிரதான சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் இதற்கு முன்பு இதுபோன்று அதிக மழை பெய்ததில்லை, காலநிலை மாற்றத்தால் இனி அடிக்கடி இதுபோன்ற நிகழ்வுகள் நடக்கலாம் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)