குப்பைகளைச் சேகரித்து பள்ளிக் குழந்தைகளுக்கு உதவும் பாகிஸ்தான் நபர் - காணொளி

குப்பைகளைச் சேகரித்து பள்ளிக் குழந்தைகளுக்கு உதவும் பாகிஸ்தான் நபர் - காணொளி
பிரசுரிக்கப்பட்டது

ஆகா ஷகீல், பாகிஸ்தானின் ஹைதராபாத் நகரத்திலிருந்து குப்பைகளைச் சேகரிக்கிறார். காயிதே-ஆசாம் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் முடித்திருக்கும் அவர், இப்போது குப்பைகளைச் சேகரிக்கும் தன்னார்வப் பணி செய்கிறார்.

இந்தக் குப்பைகளைச் சேகரித்து, அதன்மூலம் வரும் பணத்தில், அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்கு பென்சில், நோட்டுப்புத்தகம் உள்ளிட்ட பொருட்களை வாங்கித் தருகிறார்.

ஆறு பேர் இருக்கும் ஒரு வீட்டில் ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பத்து கிலோ குப்பை உருவாகிறது என்கிறார் அவர். இதன்மூலம் 3 குழந்தைகளின் ஸ்டேஷனரி தேவைகளப் பூர்த்தி செய்யமுடியும், என்கிறார். பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தின் அரசுப் பள்ளிகளில் 50 லட்சம் மாணவர்கள் பயில்கின்றனர். அரசு இவர்களுக்கு இலவச பாடப்புத்தகங்கள் வழங்க்கிகுறது. ஆனால் நோட்டுப்புத்தகம், பென்சில் ஆகியவற்றை பெற்றோர்தான் வாங்கித்தர வேண்டும்.

ஆகா ஷகீலும் அவரது நண்பர்களும் வீடுகளிலிருந்து நாணயங்கள் சேகரிப்பதன்மூலம் இந்தத் திட்டத்தைத் துவங்கினர்.

இதன்மூலம் விவசாயிகள், தொழிலாளர்களின் குழந்தைகள் உயர்கல்வி பயிலவும் உதவித்தொகை வழங்க்கப்படுகிறது.

எதிர்காலத்தில் ஆகா ஷகீல் குப்பை மறுசுழற்சி செய்யவும் திட்டமிட்டுள்ளார்.

அவர், அரசு-சாரா தொண்டு நிறுவனங்களிடமிருந்து நிதி வாங்குவதில்லை. மக்கள் உதவியுடன் தனது பணியைச் செய்துவருகிறார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)