கனடாவில் பயிலும் இந்திய மாணவர்களின் எதிர்காலத்திற்கு ஆபத்தா?

காணொளிக் குறிப்பு, கனடாவில் இந்திய மாணவர்களின் எதிர்காலத்திற்கு பாதிப்பா?
கனடாவில் பயிலும் இந்திய மாணவர்களின் எதிர்காலத்திற்கு ஆபத்தா?
பிரசுரிக்கப்பட்டது

இந்தியாவிலிருந்து கனடாவுக்குச் சென்ற மாணவர்களை திருப்பி அனுப்பும் விவகாரம் தற்போது அந்நாட்டின் நாடாளுமன்றத்தை எட்டியுள்ளது.

கனடாவின் என்.டி.பி. கட்சியின் தலைவர் ஜக்மீத் சிங் கடந்த 7ஆம் தேதி இது குறித்து கேள்வி எழுப்ப, அதற்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் பதிலளித்தார். சரி, என்னதான் பிரச்னை? சுருக்கமாக பார்ப்போம்.

போலியான கல்லூரி சேர்க்கை ஆவண விவகாரத்தில் தாங்கள் நாட்டைவிட்டு வெளியேற்றப்படலாம் என கனடாவில் இருக்கும் பல இந்திய மாணவர்கள் தற்போது அச்சம் கொண்டுள்ளனர்.

பல மாணவர்கள் வெளிப்படையாக இது குறித்து போராட்டம் நடத்தினர். 150 முதல் 200 மாணவர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டதாக இந்த விவகாரத்தைக் கையாளும் வழக்கறிஞர் கூறுகிறார்.

சரி, கனடா பாராளுமன்றத்தில் என்ன பேசப்பட்டது?

குடியேற்ற மோசடியில் சிக்கிய இந்திய மாணவர்களுக்கு நிரந்தர குடியுரிமை வழங்க பிரதமர் ஏதேனும் வழிவகை செய்வாரா என்று ஜக்மீத் சிங் பிரதமர் ட்ரூடோவிடம் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த ட்ரூடோ இந்த விவகாரம் குறித்து தான் முழுமையாக அறிந்திருப்பதாகக் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், "ஒவ்வொருவர் விஷயத்திலும் மதிப்பீடு செய்யப்பட்டு பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் தரப்பு விளக்கத்தை அளிக்க வாய்ப்பு வழங்கப்படும்’’ என்றார். (முழு தகவல் காணொளியில்)

கனடாவில் இந்திய மாணவர்களின் எதிர்காலத்திற்கு பாதிப்பா?

பட மூலாதாரம், FRÉDÉRIC SOLTAN/CORBIS VIA GETTY IMAGES

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: