பாகிஸ்தானில் கடும் வெப்ப அலையால் உறவுகளை இழந்த மக்கள்

காணொளிக் குறிப்பு, கடந்த வாரம் கராச்சியில் வெப்பநிலை 42 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமாக இருந்தது.
பாகிஸ்தானில் கடும் வெப்ப அலையால் உறவுகளை இழந்த மக்கள்
பிரசுரிக்கப்பட்டது

ஷபனா பானு தன் கணவரின் உடலைப் பெற்றுக்கொள்ள வந்திருக்கிறார். அவரது கணவர் முந்தைய நாள் காலை தன் ஆட்டோ ரிக்‌ஷாவில் வேலைக்காக சென்றார். ஆனால், கடும் வெப்பத்தில் நிலைகுலைந்த அவர் மதியம் உயிரிழந்தார்.

கடந்த வாரம் கராச்சியில் வெப்பநிலை 42 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமாக இருந்தது. கடல் காற்றின் போதாமையால், சில நாட்கள் வெப்பம் திணறடித்தது.

ஷபீர் ஸமன் லாப நோக்கற்ற அமைப்பு ஒன்றில் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக உள்ளார்.

வழக்கமான நாட்களில் இந்த பிணவறையில் 35-40 உடல்கள் வரும். ஆனால், வெப்ப அலையின்போது அது ஒரு நாளைக்கு 100-ஐ தாண்டுகிறது. சில இறப்புகள் வெப்பத்தால் ஏற்படவில்லை என அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

சில இடங்களில் இப்போது மழை பெய்யத் தொடங்கி உள்ளது. இதனால் கடும் வெப்பத்தில் இருந்து சற்று ஓய்வு கிடைத்துள்ளது.

பாகிஸ்தானில் கடும் வெப்ப அலையால் உறவுகளை இழந்த மக்கள்

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)