You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வயநாடு நிலச்சரிவு: சூரல்மலை கிராமத்தில் பிபிசி செய்தியாளர் நேரில் கண்டது என்ன?
கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் கனமழை மற்றும் நிலச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள மெப்பாடி, சூரல்மலை, முண்டகை, அட்டமலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவால் 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
ராணுவம், பேரிடர் மீட்புப் படையினர், மாநில தீயணைப்புத் துறையினர் மற்றும் உள்ளூர் மக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
கனமழை மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு தமிழ்நாடு, சிக்கிம் உள்ளிட்ட மாநிலங்கள் உதவிக்கரம் நீட்டியுள்ளன.
வயநாட்டில் சூரல்மலா, முண்டக்கை, மெப்பாடி போன்ற பகுதிகளில் பெருத்த பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. சூரல்மலா பகுதியில் ஏற்பட்ட பாதிப்புகளை களத்திலிருந்து விளக்கினார் பிபிசி தமிழ் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதன். அது குறித்து இந்தக் காணொளியில் பார்க்கலாம்.
“அதிகாரபூர்வ அறிவிப்பின்படி இந்த நிலச்சரிவுகளால் 150 பேர் உயிரிழந்துள்ளனர், 90 பேர் காணாமல் போயுள்ளனர். இப்போது நிலச்சரிவில் காயமடைந்தவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் பலர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.”
“இடிந்த விழுந்த வீடுகளின் கூரைகளுக்கு அடியிலும் சுவர்களுக்கு மத்தியிலும் யாரேனும் சிக்கியுள்ளனரா என மீட்புப் பணியினர் தேடி வருகின்றனர். தொடர்ந்து பெய்யும் கனமழைக்கு இடையே தான் மீட்பு பணிகள் நடந்துவருகின்றன” என்று அவர் கூறுகிறார்.
முழு விவரம் காணொளியில்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)