பிரகாஷ் சிங் பாதல்: சர்பாஞ்ச் ஆக அரசியலுக்குள் நுழைந்து சாதித்த மூத்த அரசியல் தலைவர்

பிரகாஷ் சிங் பாதல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பிரகாஷ் சிங் பாதல்
பிரசுரிக்கப்பட்டது

பிரகாஷ் சிங் பாதல் இந்திய அரசியலின் பிராந்திய தலைவர்களில் மிகவும் மூத்த சில தலைவர்களில் ஒருவர். பஞ்சாபில் இவரை பர்காஷ் சிங் பாதல் என அழைக்கிறார்கள்.

ஐந்து முறை பஞ்சாப் மாநில முதல்வராக இருந்த இவர், 1996 முதல் 2008 வரை சிரோமணி அகாலியின் தலைவராக இருந்தார்.

1970ஆம் ஆண்டில் தனது 43 வயதில், பாதல் முதல் முறையாக ஒரு இந்திய மாநிலத்தின் முதல்வராக ஆன இளைய தலைவர் ஆக திகழ்ந்தார்.

2017இல் தனது ஐந்தாவது பதவிக்காலத்தை முடித்தபோது அவருக்கு வயது 90. அப்போது அவர்தான் இந்தியாவில் அதிக வயதை எட்டியிருந்த மூத்த முதலமைச்சராக இருந்தார்.

1979 முதல் 1980 வரை, அப்போதைய சௌத்ரி சரண் சிங் தலைமையிலான மத்திய அரசில் விவசாய அமைச்சராக பதவி வகித்தார் பாதல். ஆனால் அவர் ஒருபோதும் தேசிய அரசியலில் ஈடுபாடு காட்டியதில்லை. மாறாக அவரது கவனம் எப்போதும் மாநில அரசியலிலேயே இருந்தது.

சீக்கியர்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறிக்கொள்ளும் அகாலி கட்சியின் தலைவராக பிரகாஷ் சிங் பாதல் இருந்தாலும், இந்துத்துவ சிந்தனை கொண்ட பாஜகவுடன் கூட்டணி வைத்து ஆட்சியைப் பிடித்தார்.

பாதலின் அரசியல் எதிரிகளும் கூட அவரது வலுவான மற்றும் ஆழமான அரசியல் பார்வையுடன் சில நேரங்களில் ஒத்துப்போகவே செய்தனர்.

அத்தகைய ஒத்திசைவு அரசியல் இரண்டாவது முறையாக 2012-2017 பாதல் முதலமைச்சராக இருந்தபோது நடந்தது.

முதல் முறையாக காங்கிரஸும், இரண்டாவது முறையாக ஆம் ஆத்மி கட்சியும் அவரது இல்லத்தின் முன் தர்ணா நடத்த வந்தபோது, பாதல் அவர்களுக்காக ஒரு கூடாரம் அமைத்து, அவர்களை வரவேற்கவும் அவர்கள் தரப்பு உரையாடலை கேட்கவும் அவர்களின் இடத்துக்கே சென்றார்.

அவரது வாழ்வில் நடந்த அத்தகைய சுவாரஸ்யமான நிகழ்வுகளை அவர் உயிர் பிரிந்த இந்நாளில் நினைவுகூர்வோம்.

பாதலின் பிறப்பு மற்றும் கல்வி

பிரகாஷ் சிங் பாதல்

பட மூலாதாரம், Getty Images

பிரகாஷ் சிங் பாதல் 1927ஆம் ஆண்டு டிசம்பர் 8 ஆம் தேதி பதிண்டா மாவட்டத்தில் உள்ள அபுல்-குரானா கிராமத்தில் பிறந்தார். அவரது தாயார் பெயர் சுந்தரி கவுர், தந்தை பெயர் ரகுராஜ் சிங்.

உள்ளூர் ஆசிரியரிடம் தனது ஆரம்பக் கல்வியை கற்ற பாதல், பின்னர் லாம்பியில் உள்ள ஒரு பள்ளியில் படிக்கத் தொடங்கினார். அங்கு அவர் கிராமத்திலிருந்து பள்ளி செல்ல குதிரையில் சவாரி செய்தார்.

அதன் பிறகு ஃபெரோஸ்பூரில் உள்ள மனோகர் லால் நினைவு உயர்நிலைப் பள்ளிக்குச் சென்றார்.

கல்லூரி படிப்புக்காக, லாகூரில் உள்ள சீக்கிய கல்லூரியில் சேர்ந்த பாதல், அங்கிருந்து இடம்பெயர்ந்த பிறகு, ஃபோர்மேன் கிறிஸ்துவ கல்லூரியில் சேர்ந்து பட்டப்படிப்பை முடித்தார்.

பிசிஎஸ் எனப்படும் பஞ்சாப் சிவில் சர்வீஸ் அதிகாரி ஆக விரும்பினார் அவர். ஆனால் அகாலி தலைவர் கியானி கர்தார் சிங்கால் ஈர்க்கப்பட்டு அரசியலில் இறங்கினார்.

சர்பாஞ்ச் ஆக தொடங்கிய அரசியல் வாழ்க்கை

பிரகாஷ் சிங் பாதல்

பட மூலாதாரம், PARKASH SINGH BADAL /SAD

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

பிரகாஷ் சிங் பாதலின் அரசியல் 1947இல் தொடங்கியது. அவர் தனது தந்தை ரகுராஜ் சிங்கைப் போலவே பாதல் கிராமத்தின் சர்பாஞ்ச் ஆனார். பின்னர் அவர் லாம்பி தொகுதி சமிதியின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

1956ல் பெப்சு மாநிலம் பஞ்சாபில் இணைந்தபோது, காங்கிரஸும் அகாலி தளமும் இணைந்து தேர்தலில் போட்டியிட்டன.

மற்ற அகாலி வேட்பாளர்களைப் போலவே, பிரகாஷ் சிங் பாதலும் 1957ஆம் ஆண்டில் பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு முதல் முறை எம்எல்ஏ ஆனார்.

பிரகாஷ் சிங் பாதல் அகாலி தளம் எப்போதும் தனியாக அரசியல் செய்ய வேண்டும் என்று வாதிடும் தலைவர்கள் மற்றும் இந்தியாவில் உள்ள பிராந்திய கட்சிகள் அதிகாரம் படைத்தவை ஆக உருப்பெற வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தவர்.

ஆனால், 1997இல் காங்கிரஸின் ஆதரவை பெற்ற பிராந்திய கட்சிகள் ஹெச்.டி. தேவேகெளடா தலைமையில் ஆட்சி அமைத்தபோது, பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக சென்றார் பிரகாஷ் சிங் பாதல்.

காரணம், ஆரம்பத்தில் இருந்தே காங்கிரஸை அவர் கடுமையாக விமர்சித்து வந்தார்.

பஞ்சாபி சுபே முன்னணியில் இருந்து தர்மயுத் முன்னணி வரையிலும், பஞ்சாபில் அதிகாரத்தில் இருக்க வேண்டுமானால் அவை எப்போதும் காங்கிரஸுடனேயே போராட வேண்டியிருந்தது.

ஒரு தொலைக்காட்சி பேட்டியின் பாதல், அகாலிதளத்தில் இணைந்து காங்கிரஸ் டிக்கெட்டில் நான் எம்எல்ஏ ஆனேன். ஆனாலும் ஆரம்பத்தில் இருந்தே காங்கிரஸ் மீது நம்பிக்கை இல்லை," என்று கூறினார்.

இளம் மற்றும் முதுபெரும் முதல்வராக இருந்த ஒரே தலைவர்

பிரகாஷ் சிங் பாதல்

பட மூலாதாரம், PARKASH BADAL/SAD

பிரகாஷ் சிங் பாதல் 1969-70இல் நடந்த இடைத்தேர்தலில் அகாலி தளம் சார்பில் போட்டியிட்டு பஞ்சாபின் முதல் காங்கிரஸ் அல்லாத அரசாங்கத்தில் அமைச்சரானார்.

ஜன சங்கத்தின் (தற்போது பாரதிய ஜனதா கட்சி) ஆதரவுடன் நீதிபதி குர்னாம் சிங்கின் தலைமையில் அங்கு அரசாங்கம் அமைக்கப்பட்டது. அதில் இரண்டாவது முறையாக எம்.எல்.ஏ ஆன பிரகாஷ் சிங் பாதல் அமைச்சரவையில் வளர்ச்சித் துறை அமைச்சரானார்.

பஞ்சாயத்து ராஜ், கால்நடை பராமரிப்பு, மீன்வளம் மற்றும் பால்வள அமைச்சகங்களின் பொறுப்பையும் அவர் வகித்தார்.

1970ஆம் ஆண்டு மாநிலங்களவை தேர்தலின் போது அகாலி வேட்பாளர் தோல்வியடைந்ததால், அகாலி தளத்தின் அப்போதைய தலைவர் சந்த் ஃபதே சிங், நீதிபதி குர்னாம் சிங்கை பதவி நீக்கம் செய்து, பிரகாஷ் சிங் பாதலை முதல்வராக்கினார்.

பிரகாஷ் சிங் பாதல் முதல் முறையாக முதல்வராக பதவியேற்றபோது அவருக்கு வயது 43 மட்டுமே. அவர் 1967இல் ஒரு முறை தேர்தலில் தோல்வியடைந்தார், அதன் பிறகு அவர் 1969 முதல் தமது கடைசி காலம் வரை ஒரு தேர்தலில் கூட தோல்வி அடையவில்லை.

1976 ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக பிரதமர் இந்திரா காந்தி 1975 ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம் தேதி நாட்டில் அவசரநிலையை அமல்படுத்தினார்.

1977 தேர்தலில், அகாலி தளம், ஜனதா கட்சி இணைந்து ஆட்சியை அமைத்து, பிரகாஷ் சிங் பாதல் இரண்டாவது முறையாக முதல்வரானார். இம்முறை 1977 முதல் 1980 வரை ஆட்சியில் இருந்தார்.

இதன் பிறகு 1997 முதல் 2002 வரை மூன்றாவது முறையாக முதல்வராக பதவியேற்று முதல் முறையாக 5 ஆண்டுகள் ஆட்சி செய்தார்.

2007-2012 மற்றும் 2012 முதல் 2017 வரை தொடர்ந்து இரண்டு முறை முதல்வராக பதவியேற்று பஞ்சாபின் புதிய அரசியல் சாதனையை பாதல் படைத்தார்.

பிப்ரவரி 2017 இல், அகாலி தளத்தின் தோல்விக்குப் பிறகு பிரகாஷ் சிங் பாதல் ராஜிநாமா செய்தபோது, அவருக்கு 90 வயது.

பாதலின் போராட்ட அரசியல் வாழ்க்கை

இந்தியாவின் சுதந்திர போராட்டம், குருத்வாரா சீர்திருத்த இயக்கம் அல்லது சுதந்திரத்திற்குப் பிறகு பஞ்சாப் பிரச்சனைகள் என எதுவாக இருந்தாலும், அகாலிதளத்தின் போராட்டத்துடன் ஆரம்பத்திலிருந்தே தொடர்பு இருந்து வருகிறது.

இந்த அனைத்து தீர்வுகளிலும் அகாலி தளம் முன்னணியில் உள்ளது.

மாஸ்டர் தாரா சிங் மற்றும் பிற தக்சலி பாந்திக் தலைவர்களால் ஏற்பட்ட ஈர்ப்பு, பிரகாஷ் சிங் பாதலை கட்சியின் விசுவாசமான தொண்டனாக மாற்றியது.

பிரகாஷ் சிங் பாதல்

பட மூலாதாரம், SAD

சிறுபான்மையினர் ஆணையத்தின் முன்னாள் தலைவர் தர்லோச்சன் சிங் ஒரு கட்டுரையில் பாதலைப் பற்றி எழுதும்போது, "பிரகாஷ் சிங் பாதலிடம் தாம் கண்ட மிகப்பெரிய குணம் என்னவென்றால், அவர் கட்சிக்கு விசுவாசமாக இருந்து எந்த முடிவையும் தயங்காமல் செய்தார் என்பதுதான்.

பல முடிவுகள் பாதலுக்கு தனிப்பட்ட முறையில் பிடிக்கவில்லை. ஆனால் அவர் கட்சி விதித்த கடமைகளை விடாமுயற்சியுடன் செய்தார் என்று அவர் குறிப்பிடுகிறார்.

மேலும், "1983 இல், சாந்த் ஹர்சந்த் சிங் லோங்கோவால் அரசியலமைப்பின் 25வது பிரிவைத் திருத்துவதற்கான கோரிக்கையின் ஒரு பகுதியாக அரசியலமைப்பின் நகல்களைக் கிழிக்க வேண்டும் என்று அகாலி தலைவர்கள் முடிவு செய்தார்கள். அவரைத் தடுப்பதை தனது கடமையாக கியானி ஜைல் சிங் கருதினார். இருவரையும் போனில் பேச வைத்தேன். ஆனால் பிரகாஷ் சிங் பாதல் சம்மதிக்கவில்லை, சாந்த் லோங்கோவாலின் உத்தரவு இல்லாமல் தன்னால் நிறுத்த முடியாது என்று கூறினார் என்று தர்லோசன் சிங் புத்தகத்தில் கூறியுள்ளார்.

எமர்ஜென்சி காலத்தில் இந்திரா காந்தி அகாலி தளத்துடன் சமரசம் செய்து கொள்ளும் மனநிலையில் இருந்தார் என்றும் தர்லோசன் சிங் கூறுகிறார். ஜூன் 25, 1975 அன்று அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது. ஒரே இரவில் பெரிய தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

அகாலி தளத்தின் முதல் குழு ஜூலை 9, 1975 அன்று கைது செய்யப்பட்டது. இதற்கு முன், எந்தவொரு சீக்கிய தலைவரும் 15 நாட்கள் காவலில் வைக்கப்படவில்லை.

பிரகாஷ் சிங் பாதல்

பட மூலாதாரம், PARKASH BADAL/FB

படக்குறிப்பு, பிரகாஷ் சிங் பாதல் அவசரநிலைக்கு எதிராக நடத்திய போராட்டத்தால் கைது செய்யப்பட்டு 19 மாதங்கள் சிறையில் இருந்தார்.

கியானி கர்தார் சிங் பிரகாஷ் சிங் பாதலால் தனது அரசியல் குருவாகக் கருதப்படுகிறார். பிரகாஷ் சிங் பாதல், மாஸ்டர் தாரா சிங், சந்த் ஃபதே சிங் போன்ற பெரிய தலைவர்களின் தலைமையில் அகாலிதளத்தில் தொடர்ந்து செயல்பட்டார்.

அவர் பஞ்சாபி சுபா மோர்ச்சா, கபூரி மோர்ச்சா மற்றும் தரம் யூத் மோர்ச்சாக்களில் தீவிரமாக பங்கேற்றார். அவரது வாழ்க்கையின் பல ஆண்டுகள் சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் கழிந்தன.

பிரகாஷ் சிங் பாதல் ஒருமுறை ஆம் ஆத்மி ஊடகத்தில் பேசும்போது தமது அரசியல் வாழ்வில் 17 ஆண்டுகள் சிறையில் இருந்ததாகக் கூறினார்.

பஞ்சாப் அரசாங்கத்தின் "ஜாக்ரிதி" இதழின் டிசம்பர் 2012 இதழில், மூத்த பத்திரிகையாளர் இர்வின் கன்னாவிடம் பேசும்போது, தாம் 25 ஆண்டுகள் சிறையில் இருந்ததாக பாதல் கூறினார்.

பாதலின் ஆதரவாளர்கள் அவரை நெல்சன் மண்டேலாவுக்குப் பிறகு இரண்டாவது அதிக சிறைவாசம் பெற்ற அரசியல்வாதி என்று போற்றி அழைக்கின்றனர்.

2011ஆம் ஆண்டில், பாதலின் அமைச்சரவையில் இருந்த முன்னாள் பாஜக அமைச்சர்களில் ஒருவரான டிக்ஷன் சூட், அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்று கோரினார்.

ஆனால், பஞ்சாப் முன்னாள் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங், இந்தக் கூற்றை நிராகரித்து, அதற்கான எந்தப் பதிவும் இல்லை என்று கூறியுள்ளார்.

"பாதல் உண்மையில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்ததில்லை. அவர் அவசரநிலையின் போது (1975) 5 மாதங்கள் சிறையில் கழித்தார். மீதமுள்ள காலத்தை மாநில விருந்தினர் மாளிகைகளில் வசதியாகவே கழித்தார், இந்த நேரம் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் இல்லை.''

பாதல்

பட மூலாதாரம், Getty Images

மோதியால் நெல்சன் மண்டேலா ஆக அழைக்கப்பட்ட பாதல்

2015ஆம் ஆண்டு ஜெய் பிரகாஷ் நாராயணின் 113வது நினைவு தினத்தையொட்டி, பிரதமர் நரேந்திர மோதி, பிரகாஷ் சிங் பாதல் முன்னிலையில் அவரை இந்தியாவின் நெல்சன் மண்டேலா என அழைத்தார்.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் வெளியான செய்தியின்படி, "பாதல் சாஹிப் இங்கே அமர்ந்திருக்கிறார். இந்தியாவின் நெல்சன் மண்டேலா இவர். பாதல் சாஹிப் போன்றவர்கள் அதிகாரத்தில் இருந்தவர்களை விட வித்தியாசமான பார்வையைக் கொண்டிருந்ததுதான் ஒரே குற்றம்" என்று மோதி கூறினார்.

அக்டோபர் 11, 2015 அன்று ஹிந்துஸ்தான் டைம்ஸில் வெளியிடப்பட்ட ஒரு செய்தியில், மோதியின் வருணிப்புக்குப் பிறகு ட்விட்டரில் அவரது அழைப்புக்கு எதிர்வினை கிளம்பியது.

பாதலை நெல்சன் மண்டேலா என மோதி அழைத்ததை அடுத்து, ட்விட்டரில் ட்ரோல் செய்யப்பட்டு #YoBadalSoMandela ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆனது.

தி ட்ரிப்யூன் நாளிதழும் 'பாதலை இந்தியாவின் நெல்சன் மண்டேலா என்று அழைக்கிறார் மோதி' என்ற தலைப்புச் செய்தியாக பிரசுரித்தது.

பாதலும் குடும்ப அரசியலும்

பிரகாஷ் சிங் பாதல் சந்தேகத்திற்கு இடமின்றி அகாலி தளத்தில் பல தசாப்தங்களாக முக்கிய தலைவராக இருந்து போற்றப்பட்டவர்.

1996 முதல் 2008 வரை அகாலிகளின் தலைவராக இருந்த அவர், பிறகு தலைமை பதவியை சுக்பீர் சிங் பாதலிடம் ஒப்படைத்தார்.

பிரகாஷ் சிங் பாதலுடன் தொடர்புடைய மிகப் பெரிய சர்ச்சை உறவினர்களுக்கு சாதகமாக செயல்படும் போக்கு.

பிரகாஷ் சிங் பாதல் ஆட்சிக்கு வந்ததும், அவர் ஒருமுறை முதல்வராகவும், மகன் சுக்பீர் சிங் பாதல் அகாலிதளத்தின் தலைவராகவும், மருமகன் மன்பிரீத் பாதல் நிதியமைச்சராகவும், மருமகன் ஆதேஷ் பார்டாப் கைரோன், சிவில் சப்ளை அமைச்சர் மற்றும் மகனின் மகன் பிக்ரம் சிங் மஜிதியா மக்கள் தொடர்பு அமைச்சராகவும் இருந்தனர்.

அவர் இரண்டாவது முறையாக துணை முதல்வர் பதவியை தனது மகன் சுக்பீர் பாதலுக்கு வழங்கினார்.

கோஷ்டி பூசல் காரணமாக அகாலிதளத்தில் இருந்து வெளியேறி காங்கிரசுக்கு சென்ற மன்பிரீத் பாதல், 2017ல் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் அங்கும் நிதியமைச்சரானார் என்பது வேறு விஷயம்.

பிரகாஷ் சிங் பாதல்

பட மூலாதாரம், Getty Images

பிரகாஷ் சிங் பாதல் கட்சிக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கிடைத்தபோது, ரஞ்சித் சிங் பிரம்மபுரா, ரத்தன் சிங் அஜ்னாலா போன்ற மூத்த தலைவர்களை விட்டுவிட்டு சுக்பீர் சிங் பாதலின் மனைவி ஹர்சிம்ரத் கவுர் பாதல் மத்திய அமைச்சராக்கப்பட்டார்.

பாதல் ஆட்சிக்கு வந்த பிறகும் கட்சித் தலைவர் பதவியை விட்டு விலகவில்லை, அதே போல் சிரோமணி குருத்வாரா பர்பந்தக் கமிட்டியின் நிர்வாகத்தையும் தனது அரசியல் ஆட்கள் மூலம் கைப்பற்றினார் என்றும் கூறப்படுகிறது.

எஸ்ஜிபிசி தலைவர் தேர்தல் குறித்து, பஞ்சாபில் சண்டீகரில் இருந்து பாதலின் உறையில் இருந்து எஸ்ஜிபிசி தலைவரின் பெயர் வெளிவருவதாக ஒரு பொதுவான குற்றச்சாட்டு இருந்தது.

பிரகாஷ் சிங் பாதல் அகாலி தளத்தின் குடும்ப வம்சத்தை உச்சத்திற்கு கொண்டு சென்றார்.

1980களில் நடந்த வன்முறைகளில் உயிர் மற்றும் சொத்து இழப்பு மற்றும் அரசியல் தலைவர்களின் பங்கைக் கண்டறிய உண்மை ஆணையம் அமைப்பதாக அறிவித்தார், ஆனால் அவர் ஆட்சிக்கு வந்த பிறகு அதை மறந்துவிட்டார்.

சண்டீகர் பிரஸ் கிளப்பில், மூத்த பத்திரிகையாளர் ஜக்தார் சிங், அவரிடம் உண்மைக் கமிஷன் குறித்து கேட்டபோது, “அதை விடுங்கள், ஏன் பழைய காயங்களை ஆற்ற வேண்டும்” என்றார்.

சண்டீகரை பஞ்சாபிற்கு வழங்குவது மற்றும் பஞ்சாபியில் பஞ்சாபி பேசும் பகுதிகளை உள்ளடக்கியது, நதி நீர் பிரச்சினை ஆகியவை பாரம்பரிய பிரச்னைகளை நீடித்தன. அவற்றை அவரது ஆளுகையின்போது தீர்க்க முடியவில்லை.

ஊழல் குற்றச்சாட்டுகள்

1997 முதல் 2002 வரை பிரகாஷ் சிங் பாதலின் பதவிக் காலத்தில், அவரது குடும்பத்தினர் மற்றும் அமைச்சர்கள் மீது கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

2002 சட்டமன்றத் தேர்தலில், ஊழலைப் பிரச்னையாக்கி பாதல்களை சிறைக்கு அனுப்புகிறோம் என்ற முழக்கத்துடன் தேர்தலை சந்தித்தது காங்கிரஸ்.

அரசு அமைந்த பிறகு, பாதல் குடும்பத்தின் மீதான ரூ.3000 கோடி மதிப்புள்ள சொத்துக் குவிப்பு குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணையை லஞ்ச ஒழிப்புத்துறையிடம் முதல்வர் பதவிக்கு வந்த காங்கிரஸின் கேப்டன் அமரீந்தர் சிங் ஒப்படைத்தார்.

பாதல்

பட மூலாதாரம், PARKASH BADAL/FB

இந்த வழக்குகள் 2003இல் தொடங்கப்பட்டன, பிரகாஷ் சிங் பாதல், சுக்பீர் சிங் பாதல் ஆகியோர் கைது செய்யப்பட்டனர், ஆனால் சில நாட்களுக்குப் பிறகு அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

பல மாத விசாரணைக்குப் பிறகு, 78 கோடி ரூபாய்க்கான குற்றப்பத்திரிகையை லஞ்ச ஒழிப்புத்துறை சமர்ப்பித்தது. அந்த குற்றச்சாட்டுகளை கேப்டன் அம்ரீந்தர் சிங்கின் அரசாங்கம் அதன் ஐந்தாண்டு பதவிக் காலத்தில் நீதிமன்றத்தில் நிரூபிக்க முடியவில்லை.

2007 இல் எஸ்ஏடி மீண்டும் ஆட்சிக்கு வந்தது, 2010 வாக்கில், விசாரணை அதிகாரி உட்பட சாட்சிகள் பிறழ் சாட்சியம் அளித்ததால் மூத்த மற்றும் இளைய பாதல் இருவரும் சாட்சியங்கள் இல்லாததால் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர்.

அவரது பதவிக்காலத்தில், பாதல் குடும்பம் ஒரு மாஃபியாவைப் போல பஞ்சாபில் அதிகாரத்தை செலுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டது. பாதல் குடும்பம் எப்போதும் அந்த குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளது.

இவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை எந்த நீதிமன்றத்திலும் நிரூபிக்க முடியவில்லை. உதாரணமாக, சுக்பீர் பாதலின் மைத்துனரும் அமைச்சருமான பிக்ரம் மஜிதியா போதைப்பொருள் மாஃபியா மற்றும் சுரங்க மாஃபியாவுக்கு ஆதரவளித்ததாக குற்றம்சாட்டப்பட்டார்.

சுக்பீர் பாதல் மக்களின் வணிகத்தை, குறிப்பாக போக்குவரத்து மற்றும் கேபிள் மாஃபியா மற்றும் மதுபான மாஃபியாவை ஆக்கிரமித்ததாக குற்றம்சாட்டப்பட்டார்.

ஆனால் இந்தக் குற்றச்சாட்டுகள் அரசியல் சொல்லாடல்களுக்குள் மட்டுமே பயன்படுட்டன. பாதல் குடும்பத்தினருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் எதுவும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை.

பிரகாஷ் சிங் பாதல்

பட மூலாதாரம், PARKASH BADAL/FB

இதற்கிடையில், பிரகாஷ் சிங் பாதலின் ஆட்டா டால் எனப்படும் கோதுமை பருப்பு திட்டம், சங்கத் தர்ஷன், பள்ளி செல்லும் பெண்களுக்கு இலவச மிதிவண்டி, விளையாட்டுக் கழகங்களுக்கு உபகரணங்கள் விநியோகம், பஞ்சாபில் கட்டமைப்பு விரிவாக்கம் போன்றவற்றின் செயலாக்கம் பாதல் குடும்பத்தினர் மீதான அனைத்து அரசியல் ரீதியிலான குற்றச்சாட்டுகளையும் நிராகரிக்கச் செய்தன.

பர்காஷ் சிங் பாதல் தனது 80களில் கூட, சுறுசுறுப்புடன் மக்களிடம் சென்றது அவரை மேலும் பிரபலமாக்கியது.

2012 இல், பிரகாஷ் சிங் பாதல் மீண்டும் ஆட்சியைப் பிடித்து பஞ்சாப் அரசியல் வரலாற்றில் இரண்டாவது முறையாக முதல்வரானார்.

பஞ்சாபுக்குள் சுழன்ற அரசியல்

சீக்கிய சமூகத்தின் அரசியல் பிரதிநிதித்துவத்திற்காக அகாலி தளம் உருவாக்கப்பட்டது. ஆனால் பிரகாஷ் சிங் பாதல் அதை பஞ்சாபி கட்சியாகவே பலப்படுத்தினார்.

பஞ்சாபில் ஆட்சியைப் பிடிக்க ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்துடன் அரசியல் கூட்டணியை உருவாக்கினார்.

மறுபுறம், சீக்கிய சமூகத்தின் நலன்களுக்கு எதிராக ஆர்எஸ்எஸ் செயல்படுவதாக சீக்கியர்களின் மதத் தலைமை குற்றம்சாட்டியது.

பிரகாஷ் சிங் பாதல்

பட மூலாதாரம், PUNJAB GOVT./JAGRITI

ஷிரோமணி குருத்வாரா பிரபந்தக் கமிட்டி (SGPC) மற்றும் அகால் தக்த் ஆகியவற்றை தனது தனிப்பட்ட நலன்களுக்காகப் பயன்படுத்தி, சீக்கிய மரபுகளைத் தகர்ப்பதாகப் பல பிரபந்தக் தலைவர்களால் பிரகாஷ் சிங் பாதல் குற்றம்சாட்டப்பட்டார்.

ஆனால், பிரகாஷ் சிங் பாதல், தேர்தல் அரசியலில் ஒருபோதும் வீழ்த்தப்படவில்லை.

2012-2017 வரை அவர் முதலமைச்சராக இருந்தபோது குரு கிராந்த் சாஹிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்கள் பாதல் குடும்பத்திற்கு எதிரான போராட்டத்தை பிரபந்தக் வட்டாரங்களில் புதிய உச்சத்திற்கு கொண்டு வந்தன.

பிரகாஷ் சிங் பாதல், அவரது அமைச்சர்கள் மற்றும் தலைமையுடன், தி அகல் தக்த் சாஹிப்பில் தவறுகளை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டார். ஆனால் மக்கள் அவரை நம்பவில்லை.

இந்த படுகொலை சம்பவத்தை எதிர்க்கட்சிகள் தேர்தல் பிரச்னையாக்கின. அதன் விளைவாக, பிரகாஷ் சிங் பாதலின் சிரோமணி அகாலி தளம் அதன் 100 ஆண்டுகால வரலாற்றில் மிகவும் மட்டுப்படுத்தப்பட்டது.

விவசாய சட்டங்களுக்கு எதிராக நடந்து வரும் போராட்டத்தின் காரணமாக, அகாலி தளம் (பிரகாஷ் சிங் பாதல்) தனது மருமகள் ஹர்சிம்ரத் கவுர் பாதலை நரேந்திர மோதி தலைமையிலான அமைச்சரவையில் இருந்து திரும்பப் பெற்றது.

நகமும் சதையுமான உறவு என பாதால்கள் அழைத்து வந்த பாஜகவுடனான உறவு முறிந்தது.

இந்த சூழலில் பிரகாஷ் சிங் பாதல் அறிவிக்கப்படாத ஓய்வு போல தமது அரசியல் செயல்பாட்டைக் குறைத்தார். ஆனால் கடைசியாக 2022 பஞ்சாப் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

மரியாதைக்கு இணையாக சர்ச்சை

பிரகாஷ் சிங் பாதல்

பட மூலாதாரம், Getty Images

அகால் தக்த் சாஹிப், பொற்கோவிலுக்கு முன்னால் அமைந்துள்ளது, இது சீக்கிய சமூகத்தின் சுதந்திரமான அரசியல் அமைப்பின் மிகப்பெரிய அடையாளமாகும்.

2011ஆம் ஆண்டில், தி அகல் தக்த்தைச் சேர்ந்த ஐந்து சிங் சாஹிபன்கள், பிரகாஷ் சிங் பாதலுக்கு பந்த் ரத்னா, ஃபக்ர்-இ-கௌம் விருது வழங்கி கௌரவித்தார்கள்.

சீக்கியர்களின் வரலாறு மற்றும் பாரம்பரியத்தின் நினைவுச்சின்னங்களை நிர்மாணிப்பதற்காகவும், சீக்கிய மதத்தை மேம்படுத்துவதற்காகவும் பிரகாஷ் சிங் பாதலுக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

சுவாரஸ்யமாக, அந்த நேரத்தில் பஞ்சாபில் பிரகாஷ் சிங் பாதல் அரசாங்கம் இருந்தது. ஷிரோமணி அகாலி தளம் எஸ்ஜிபிசியின் கட்டுப்பாட்டில் இருந்தது.

பிரபந்தக் வட்டாரங்கள் இதை தங்களுக்குக் கிடைத்த மரியாதையாகக் கருதினர். அதே சமயம், சீக்கிய மரபுகளை பாதல் புண்படுத்தியதாகக் குற்றம் சாட்டினர்.

நவம்பர் 2015இல் நடந்த படுகொலை சம்பவத்தைத் தொடர்ந்து, படாலி சீக்கியரல்லாத அமைப்புகள் தர்ன் தரானில் உள்ள சப்பாவில் "சர்பத் கல்சா" என்ற பெயரில் ஒரு கூட்டத்தை நடத்தினர். பந்த் ரத்னா மற்றும் ஃபகர் கௌம் விருதுகளைத் திரும்பப் பெறுவதற்கான தீர்மானத்தை அவை நிறைவேற்றின.

சர்பத் கல்சா என்பது சீக்கிய சமூகத்தின் ஒரு பாரம்பரியமாகும், இதில் மக்கள் தாங்களாகவே ஒன்றுகூடி எந்த ஒரு பிரச்னையிலும் தீர்மானங்களை நிறைவேற்றி அரசியல் மற்றும் மத தலைமைகளுக்கு உத்தரவுகளை பிறப்பிப்பார்கள்.

பாரதிய ஜனதா மற்றும் அகாலி தளம் ஆட்சியில் இருந்தபோது, மார்ச் 2015 இல், பிரகாஷ் சிங் பாதலுக்கு நாட்டின் உயரிய குடிமகன் விருதான பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: