You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அமெரிக்கா: விமானமும் ஹெலிகாப்டரும் மோதி விபத்து - டிரம்ப் கூறியது என்ன?
எச்சரிக்கை: இந்த காணொளியில் சங்கடம் தரும் காட்சிகள் உள்ளன
அமெரிக்காவின் வாஷிங்டன் டிசியில் வானில் பறந்துகொண்டிருந்த விமானம் மற்றும் ஹெலிகாப்டர் மோதி போடோமேக் ஆறு பகுதியில் விபத்துக்குள்ளாகியது.
விபத்துக்குள்ளான அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் 60 பயணிகளும் 4 பணியாளர்களும், அமெரிக்க ராணுவ பிளாக் ஹாக் ஹெலிகாப்டரில் 3 ராணுவ வீரர்களும் இருந்தனர். விபத்தில் சிக்கியவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
18 பேரின் உடல்கள், விமானம் விழுந்த போடோமேக் ஆற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளன என்று, பிபிசியின் அமெரிக்க கூட்டாளி செய்தி நிறுவனமான சிபிஎஸ் கூறுகிறது.
ரீகன் வாஷிங்டன் தேசிய விமான நிலையத்தின் 33வது ஓடுதளத்தை நோக்கி வந்துகொண்டிருந்தபோது, உள்ளூர் நேரப்படி இரவு 9 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது என்று விமான போக்குவரத்து நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உயிரிழப்புகள் குறித்து அரசு அதிகாரபூர்வமாக எதையும் குறிப்பிடவில்லை என்றாலும், இறந்தவர்களின் ஆன்மாக்களை கடவுள் ஆசீர்வதிக்கட்டும் என்றும் இந்த விபத்து தவிர்த்திருக்கக்கூடியது என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்த முழு விவரம் காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)