You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: சிறைக்குள் வெள்ளம், கைதிகள் துப்பாக்கி முனையில் வெளியேற்றம்
காணொளி: சிறைக்குள் வெள்ளம், கைதிகள் துப்பாக்கி முனையில் வெளியேற்றம்
பிரசுரிக்கப்பட்டது
திட்வா புயல் எதிரொலியாக இலங்கையில் நீடித்த கனமழையால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில், அனுராதபுரத்தில் ஏற்பட்ட மழைவெள்ளம் அங்குள்ள சிறைச்சாலைக்குள் புகுந்தது.
இதன் காரணமாக, அந்த சிறைக்குள் அடைக்கப்பட்டிருந்த கைதிகள் பாதுகாப்பாக வேறிடத்திற்கு மாற்றப்பட்டனர். இலங்கை காவல் துறை அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்ட போது, கைதிகள் மார்பளவு நீரில் நடந்து சென்று படகில் ஏறும் வீடியோ வெளியாகியுள்ளது.