பார்வையற்ற கணவனுக்கு பார்வையாக இருந்து பாதுகாக்கும் மாற்றுத்திறனாளி மனைவி
நாமக்கல் தபால்கார தெருவை சேர்ந்தவர் முருகேஸ்வரி. கால் ஊனமுற்ற மாற்றுத்திறனாளியான இவர் ஆசிரியர் பயிற்சி முடித்துள்ளார்.
இவரது கணவர் பிரபாகரனும் ஒரு பார்வையற்ற மாற்றுத்திறனாளி. ஆசிரியர் படிப்பில், ஆராய்ச்சி படிப்பு ( எம்ஏ, பிஎட், எம்ஃபில்)முடித்த இவர் ஆசிரியர் பணிக்காக பலமுறை முயற்சி செய்தும் வாய்ப்பு கிடைக்கவில்லை
இருந்தாலும் மனம் தளராத முருகேஸ்வரி தன் குடும்பத்தை காக்க நாமக்கல் பூங்கா சாலையில் காய்கறி கடை ஒன்றை துவங்கினார். அதில் ஓரளவு வருமானம் வர குடும்பத்தை கஷ்டத்துடன் நடத்தி வந்தார் .
இந்நிலையில் சேவை அமைப்பு ஒன்று சுய வேலைக்கான பயிற்சி முகாம் ஒன்றை நடத்தியது. இதை அறிந்த முருகேஸ்வரி தன் கணவர் பிரபாகரனை ஒரு மாத காலம் ஒயர் கூடை பின்னும் பயிற்சியில் சேர்த்து விட்டார். ஒயர் கூடை பயிற்சி பெற்ற கணவர் பிரபாகரனுக்கும் தன் காய்கறி கடை அருகிலேயே ஒரு கடையை அமைத்துக் கொடுத்தார்.
அதில் அமர்ந்து தற்போது பிரபாகரன் ஒயர் கூடை பின்னி வியாபாரம் செய்து வருகிறார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



