சினிமா ‘பேய்களை’ தத்ரூபமாக உருவாக்கும் பாகிஸ்தான் இளம்பெண் - காணொளி
சினிமா ‘பேய்களை’ தத்ரூபமாக உருவாக்கும் பாகிஸ்தான் இளம்பெண் - காணொளி
பிரசுரிக்கப்பட்டது
பாகிஸ்தானின் கராச்சி நகரைச் சேர்ந்தவர் ரஸான் யாசின். கொரோனா பொதுமுடக்கத்தின் போது, விளையாட்டாக, சினிமாவில் வரும் பேய்கள், காயங்களுடன் கூடிய முகங்கள் போன்றவற்றின் மேக்கப் முறைகளைச் செய்துபார்க்கத் துவங்கினார்.
இப்போது அதைத் தாமாகவே தேடிக் கற்றுக்கொண்டு, சினிமாவில் இவற்றுக்கான பிரத்யேகமான மேக்கப் கலைஞராக உலா வருகிறார். முதலில் வீட்டில் கிடைக்கக்கூடிய பொருட்களை மட்டும் வைத்து இந்த மேக்கப் முறைகளைச் செய்துபார்த்த ரஸான், இப்போது தொழில்முறை மேக்கப் கலைஞராக உருவாகியிருக்கிறார்.
தன் நண்பர்கள் எப்போதும் ‘ஏன் எல்லோரையும் பயமுறுத்துகிறாய்,’ என்று கேட்பதாகச் சொல்கிறார் ரஸானியா.
ஆனால், அவரது முதல் அனுபவம், தன் அம்மாவை பயமுறுத்தியது...

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



