சிரிப்பது எப்படி? - கற்றுக்கொள்ள பயிற்சி வகுப்புக்கு செல்லும் ஜப்பான் மக்கள்

சிரிப்பது எப்படி? - கற்றுக்கொள்ள பயிற்சி வகுப்புக்கு செல்லும் ஜப்பான் மக்கள்
பிரசுரிக்கப்பட்டது

ஜப்பானில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மாஸ்க் அணிவது கட்டாயம் அல்ல என்று அறிவிக்கப்பட்ட நிலையில், மீண்டும் சிரிப்பது எப்படி என்பதை கற்றுக்கொடுக்கும் வகுப்புகள் பெருகியுள்ளன

ஜப்பானைச் சேர்ந்த முன்னாள் வானொலி அறிவிப்பாளரான கெய்கோ கவானோ, சிரிப்பது எப்படி என்பது குறித்த வகுப்பை நடத்தி வருகிறது. சிரிப்பது தொடர்பாக பயிற்சி அளிப்பதற்கு ஒரு மணி நேரத்துக்கு 55 அமெரிக்க டாலரை கட்டணமாக அவர் வசூலிக்கிறார்.

கொரோனா காலத்தில் முகக் கவசம் அணிந்திருந்ததால் தன் முகத்தின் தசைகளுக்கு பெரிதாக எந்த வேலையும் கொடுக்கவில்லை என்றும் இந்த வகுப்பு தன் முக தசைகளுக்கு நல்ல பயிற்சியாக இருப்பதாகவும் மாணவி ஹிமவாரி யோஷிடா கூறுகிறார். (முழு தகவல் காணொளியில்)

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: