காஸா போரை நிறுத்த இஸ்ரேல் கூறும் புதிய வழி - ஜோ பைடன் ஹமாஸுக்கு சொன்னது என்ன?

காஸா போரை நிறுத்த இஸ்ரேல் கூறும் புதிய வழி - ஜோ பைடன் ஹமாஸுக்கு சொன்னது என்ன?
பிரசுரிக்கப்பட்டது

காஸாவில் மோதலை முடிவுக்குக் கொண்டுவர இஸ்ரேல் முன்வைத்துள்ள புதிய யோசனையை ஏற்குமாறு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஹமாஸிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதுகுறித்துப் பேசும்போது "இப்போது இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான நேரம் வந்துவிட்டது" என்றும் அவர் தெரிவித்தார். மூன்று பகுதிகள் கொண்ட இந்த முன்மொழிவு ஆறு வார போர்நிறுத்தத்துடன் தொடங்கும்.

கூடவே இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) காஸாவில் மக்கள் நெருக்கமாக வாழும் பகுதிகளில் இருந்து வெளியேறும். இதனுடன் மனிதாபிமான உதவிகள் துரிதப்படுத்தப்படும் மற்றும் சில பிணைக் கைதிகளுக்கு மாற்றாக பாலத்தீன கைதிகள் விடுவிக்கப்படுவார்கள். இந்த முன்மொழிவை "நேர்மறையான" கண்ணோட்டத்தில் பார்ப்பதாக ஹமாஸ் கூறியுள்ளது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)