மின்விசிறியில் அடிபட்டச் சிட்டுகுருவி : சிபிஆர் செய்து காப்பாற்றிய தெலங்கானா இளைஞர்
மின்விசிறியில் அடிபட்டச் சிட்டுகுருவி : சிபிஆர் செய்து காப்பாற்றிய தெலங்கானா இளைஞர்

பிரசுரிக்கப்பட்டது
மின்விசிறியில் அடிபட்டு உயிரிழந்தச் சிட்டு குருவியை, சி.பி.ஆர் சிகிச்சை செய்து காப்பாற்றிய தெலங்கானா இளைஞரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம், நிர்மல் மாவட்டத்தைச் சேர்ந்த சியாம்ராம் என்பவரின் வீட்டிற்குள் நுழைந்தச் சிட்டுகுருவி மின்விசிறியில் அடிபட்டு உயிரிழந்தது. ஆனால் அந்தச் சிட்டு குருவியை காப்பாற்றுவதற்காக அந்த இளைஞர் உடனடியாக சிபிஆர் சிகிச்சை முறையை மேற்கொண்டார். இதனால் அந்தச் சிட்டுகுருவி மீண்டும் உயிர் பிழைத்தது.
இந்த நெகிழ்ச்சியான காணொளி தற்போது பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



