ரஷ்ய அதிபர் தேர்தலில் வன்முறை - வாக்குப்பதிவு மையங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு

ரஷ்ய அதிபர் தேர்தலில் வன்முறை - வாக்குப்பதிவு மையங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு
பிரசுரிக்கப்பட்டது

ரஷ்ய அதிபர் தேர்தலில் வாக்குப்பதிவு மையங்களில் பலரும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.

செயின்ட் பீட்டர்ஸ்பெர்க்கில் வாக்குப்பதிவு மையத்தின் மீது ஒரு பெண் பெட்ரோல் குண்டு வீசினார்.

தலைநகர் மாஸ்கோவில் பெண் ஒருவர் வாக்குப்பெட்டியில் மையை ஊற்றினார்.

வெரோனிஷ் நகரில் வாக்குப்பெட்டிக்குள் வாக்காளர் ஒருவர் பச்சை நிற திரவத்தை ஊற்றியுள்ளார்.

மாஸ்கோவின் தென்கிழக்குப் பகுதியில் ஒரு வாக்குப் பதிவு மையத்திற்கு தீ வைக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவில் வலுவான எதிர்க்கட்சித் தலைவர் யாரும் இல்லாததால் தற்போதைய அதிபர் விளாதிமிர் புதின் ஐந்தாவது முறையாக மீண்டும் அதிபராவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)