You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
"தாலிபன்களால் எங்களிடமிருந்து இசையை பிரிக்க முடியாது" - நாடு கடத்தப்பட்ட இசைக் கல்லூரி மாணவர்கள்(காணொளி)
ஆப்கானிஸ்தானில் மீண்டும் தாலிபன்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, அங்கு இசையை தடை செய்தனர்.
ஆப்கானிஸ்தான் தேசிய இசைக் கல்லூரியில் படித்த மாணவர்களின் இசைக் கருவிகளை தாலிபன்கள் நொறுக்கினர். அந்த இசைக் கருவிகளுடன் அந்த மாணவர்களின் கனவுகளும் நொறுங்கின.
ஆனால் இசைக் கருவிகளை இழந்தாலும், இசையை விட அந்த மாணவர்கள் தயாராக இல்லை. நாடு கடத்தப்பட்ட மாணவர்கள் போர்ச்சுகல் நாட்டுக்கு சென்று மீண்டும் தங்களது இசைக் குழுவை தொடங்கினர்.
ஆப்கானின் பாரம்பரிய இசையை உயிர்ப்புடன் வைத்திருக்க இந்த மாணவர்கள் உறுதி கொண்டனர். 2023ஆம் ஆண்டில் இசை நிகழ்ச்சிகளை நடத்தி பலரது பாராட்டுகளையும் இவர்கள் பெற்றனர்.
'ஆசாதா' என பெயரிடப்பட்டுள்ள இந்த இசைக்குழுவுக்கு பார்சி மொழியில் விடுதலை என பொருள்.
இளம் சிறுவர், சிறுமிகள் அனைவரும் தங்களைப் போலவே கல்வி, எதிர்காலம் இல்லாமல் இருக்க வேண்டும் என தலிபான்கள் நினைக்கின்றனர் என்று இந்த இளம் இசைக் கலைஞர்கள் தெரிவித்தனர்.
தாலிபன்கள் ஆதிக்கம் குறைந்த பிறகு மீண்டும் ஆப்கானிஸ்தான் சென்று அங்குள்ள சிறுவர், சிறுமிகளுக்கு இசையை கற்றுத் தர வேண்டும் என்ற முனைப்பில் இருக்கின்றனர் இந்த மாணவர்கள்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்