லிபியாவில் சுனாமி போன்ற வெள்ளம்: 5,000 பேர் பலி; 10,000 பேரை காணவில்லை - என்ன நடந்தது?
லிபியாவில் சுனாமி போன்ற வெள்ளத்தால் ஆயிரக்கணக்கானோர் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். குறைந்தது 5,200 பேர் உயிரிழந்ததாகவும் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காணாமல் போனதாகவும் செஞ்சிலுவைச் சங்கம் கூறுகிறது.
கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டவர்களின் உடல்களை மீட்கும் முயற்சியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமையன்று டேர்னா நகரில் டேனியல் புயல் தாக்கியபோது 2 அணைகளும் 4 பாலங்களும் இடிந்து நகரின் பெரும்பகுதி நீரில் மூழ்கிவிட்டன.
எகிப்து உட்பட சில அண்டை நாடுகளில் இருந்து சில உதவிகள் வரத் தொடங்கியுள்ளன, ஆனால் லிபியாவின் அரசியல் சூழ்நிலையால் மீட்பு முயற்சிகள் தடைபட்டுள்ளன. நாட்டில் இரண்டு போட்டி அரசாங்கங்கங்கள் ஆட்சி செய்து வருவதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



