You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
லாஸ் ஏஞ்சலிஸ்: வேகமாகப் பரவும் புதிய காட்டுத் தீ - கட்டுக்குள் கொண்டுவர முடியுமா?
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் புதிய காட்டுத் தீ வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. இதையடுத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த காட்டுத் தீ 9000 ஏக்கருக்கும் மேல் பரவி இருப்பதாக கலிஃபோர்னியா தீயணைப்புத்துறையின் அதிகாரப்பூர்வ தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
லாஸ் ஏஞ்சலிஸ் நகரின் வட மேற்கில் 45 கிலோமீட்டர் தொலைவில் புதன்கிழமை காலையன்று கேஸ்ஏரி அருகில் ஹியூஸ் தீ (Hughes fire) காட்டுத் தீ பரவத் தொடங்கியது. மலைப்பாங்கான இந்த பகுதி பல்வேறு குடியிருப்புகள் மற்றும் பள்ளிகளுக்கு எல்லையாக உள்ளது.
காற்று மற்றும் வறண்ட புற்கள் காரணமாக ஏற்பட்ட இந்த காட்டுத் தீஇதுவரை 9 ஆயிரத்து 200 ஏக்கருக்கும் அதிமான பகுதிகளில் பரவியுள்ளது.
வீடுகள், வணிக வளாகங்கள் போன்றவை ஹியூஸ் தீயால் பாதிக்கப்படவில்லை என்றும் இந்த காட்டுத் தீயை கட்டுக்குள் கொண்டுவர முடியும் என்றும் தீயணைப்புத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
முழு விவரம் காணொளியில்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)