சீனா மீது வரிவிதித்த டிரம்ப், அமெரிக்காவுக்கு சீனா கொடுத்த பதிலடி என்ன?

காணொளிக் குறிப்பு,
சீனா மீது வரிவிதித்த டிரம்ப், அமெரிக்காவுக்கு சீனா கொடுத்த பதிலடி என்ன?
பிரசுரிக்கப்பட்டது

சீனா மீதான அமெரிக்க வரிகள் இந்திய நேரப்படி, காலை 10.31 நிமிடங்களுக்கு நடைமுறைக்கு வந்துள்ளது. இதற்கு எதிர்வினையாகச் சீனாவும் அமெரிக்கா மீது வரி விதிப்பதாகத் தெரிவித்துள்ளது.

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டும் பொருட்களுக்கான வரியை அமெரிக்கா உயர்த்தியை அடுத்து, சீனா பதிலுக்கு அமெரிக்க சரக்குகளுக்கு வரி விதித்துள்ளது.

இதனால் அமெரிக்காவிலிருந்து கொண்டுவரப்படும் பெரிய என்ஜின்கள் கொண்ட கார், சரக்கு வாகனங்கள், நிலக்கரி, திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு, கச்சா எண்ணெய், விவசாய இயந்திரங்கள் ஆகியவற்றின் இறக்குமதி பாதிக்கப்படும்.

அமெரிக்காவின் நிலக்கரி மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு ஆகியவற்றின் இறக்குமதி மீது 15 சதவீதம் வரி விதிக்கப்படும் எனவும், மேலும், கனரக வாகனங்கள், விலையுயர்ந்த கார்கள் மற்றும் விவசாய உபகரணங்கள் மீது 10 சதவீதம் வரி விதிக்கப்படும் எனவும் சீனா தெரிவித்துள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)