'ஒரு அறையில் 50 நபர்கள் வரை அடைக்கப்பட்டு இருப்பார்கள்' - நாடு கடத்தப்பட்ட அனுபவத்தை பகிர்ந்த இந்தியர்
சுமார் 40 லட்சம் ரூபாய் செலவு செய்து, ஆறு மாதங்களில் ஐரோப்பாவை கடந்து, பனாமா காடுகளைக் கடந்து ஜனவரி 24ஆம் தேதி அமெரிக்கா சென்றடைந்த ஜஸ்பால் சிங், வெறும் 11 நாட்களில் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார்.
புதன்கிழமையன்று அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்ட இந்தியர்களில் பஞ்சாபின் குர்தாஸ்பூரில் உள்ள ஃபதேகர் சுரியான் நகரத்தைச் சேர்ந்த ஜஸ்பால் சிங்கும் ஒருவர்.
கடந்த 2022ஆம் ஆண்டு 'விசிட்டர் விசாவில்' பிரிட்டனுக்கு பயணம் செய்ததாகத் தனது பயண அனுபவத்தை அவர் பகிரத் தொடங்கினார்.
அதில், 2024ஆம் ஆண்டில் அவர் அமெரிக்கா செல்வதற்கு ஒரு ஏஜென்டை தொடர்புகொண்டது பற்றியும், ஆறு மாதங்களுக்குப் பிறகு அமெரிக்காவுக்கு சென்றவுடன் காவலில் வைக்கப்பட்டது பற்றியும், அதன் பிறகு, கைவிலங்கிடப்பட்டு, சங்கிலியால் கட்டப்பட்டு, மீண்டும் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டதையும் அவர் பகிர்ந்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)


