You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
2024க்கு விடைகொடுத்து, 2025 புத்தாண்டை உலகம் வரவேற்றது எப்படி?
உலகம் 2024-ஆம் ஆண்டுக்கு விடைகொடுத்து, வாணவேடிக்கைகள், வண்ண ஒளி நிகழ்வுகள் மற்றும் சிறப்பு பிரார்த்தனைகளுடன் 2025-ஆம் ஆண்டை வரவேற்றது.
பல்வேறு நாடுகளில் உள்ள மக்கள் புத்தாண்டை எவ்வாறு கொண்டாடினார்கள் என்பதை இந்தக் காணொளியில் காணலாம்.
புத்தாண்டை வரவேற்கும் விதமாக துபாயின் புகழ்பெற்ற 'புர்ஜ் கலிஃபா' கட்டடத்தில் வாணவேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டன. மும்பையின் 'கேட்வே ஆஃப் இந்தியாவில்' உட்பட பல பகுதிகளில் புத்தாண்டைக் கொண்டாட மக்கள் ஒன்றுகூடுவது வழக்கமான ஒரு நிகழ்வு. இம்முறையும் அதுபோல மக்கள் கூடியதைக் காண முடிந்தது.
இந்தோனீசியாவின் பாலியில், '2024ஆம் ஆண்டின் சூரியனை விடுவித்துவிட்டு, 2025ஆம் ஆண்டின் சூரியனை வரவேற்கும்' விதமாக நடனமாடி, நடனக் கலைஞர்கள் புத்தாண்டை வரவேற்றனர்.
முழு விவரம் காணொளியில்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)