You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
விண்வெளியில் இருந்தே தேர்தலில் வாக்களிக்கப் போகும் சுனிதா வில்லியம்ஸ் - எப்படி?
எட்டு நாட்கள் பயணமாக சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்ற சுனிதா வில்லியம்ஸ், பாரி புட்ச் வில்மோர் இருவரும் இன்னும் பூமிக்குத் திரும்பவில்லை. இந்நிலையில், அவர்கள் அமெரிக்க அதிபர் தேர்தலில் விண்வெளியில் இருந்தபடியே வாக்களிக்கப் போகிறார்கள்.
ஜூன் 5ஆம் தேதி இரண்டு அமெரிக்க விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ஒரு சோதனைப் பயணத்திற்காகச் சென்றபோது, சில நாட்களில் பூமிக்குத் திரும்பிவிடுவோம் என்ற எதிர்பார்ப்பில்தான் சென்றனர். ஆனால் விஷயங்கள் திட்டமிட்டபடி நடக்கவில்லை.
இரண்டு மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், சுனிதா வில்லியம்ஸ், பாரி புட்ச் வில்மோர் இருவரும் இன்னும் பூமிக்குத் திரும்பாமல் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியுள்ளார்கள்.
இந்த இருவரும், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டைக்கூட (2025) விண்வெளியில் கழிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில் அவர்கள் விண்வெளியில் இருந்தே தேர்தலில் வாக்களிக்கப் போவது எப்படி?
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)