மத்திய பிரதேசத்தில் புல்டோசருக்கு இலக்கான கறிக்கடை - என்ன காரணம்?

காணொளிக் குறிப்பு, மத்திய பிரதேசத்தில் புல்டோசருக்கு இலக்கான கறிக்கடை - என்ன காரணம்?
மத்திய பிரதேசத்தில் புல்டோசருக்கு இலக்கான கறிக்கடை - என்ன காரணம்?
பிரசுரிக்கப்பட்டது

புல்டோசர் விவகாரம் மீண்டும் ஒரு சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. இந்த முறை புல்டோசர் சம்பவம் நடந்த இடம் மத்திய பிரதேசம்.

மத்திய பிரதேசத்தின் உஜ்ஜயினியில் தடையை மீறி சட்டவிரோதமாக திறந்தவெளியில் இறைச்சியை விற்பனை செய்ததாக ஒரு கடை இடிக்கப்பட்டது.

மத்தியபிரதேசத்தில் சமீபத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜக அபார வெற்றி பெற்றது. புதிய முதல்வராக மோகன் யாதவ் நேற்று டிசம்பர் 13ம் தேதி பதவியேற்றுக்கொண்டார்.

இதைத் தொடர்ந்து அவர் தலைமையில் நடைபெற்ற முதல் அமைச்சரவை கூட்டத்தில் திறந்தவெளியில் இறைச்சி, முட்டை, மீன் போன்றவற்றை விற்பனை செய்வதற்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)