You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட்: விராட் கோலி 40 மாதங்களுக்கு பிறகு அடித்த சதம்
ஆமதாபாத்தில் நடைபெற்று வரும் 4வது டெஸ்ட் போட்டியில் விராட் கோலியின் சதம் காரணமாக இந்தியா முன்னிலை பெற்றுள்ளது. அவர் இரட்டை சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 186 ரன்களின் ஆட்டமிழந்தார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
அதில் நான்காவது டெஸ்ட் போட்டி ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோதி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நான்காவது நாள் ஆட்டம் தொடங்கிய 6ஆவது ஓவரிலேயே ரவீந்திர ஜடேஜா அவுட்டானார்.
டாட் மர்ஃபி வீசிய பந்தை அவர் லாங் ஷாட் அடித்தபோது உஸ்மான் கவாஜா அதை கேட்ச் செய்து அவரை அவுட்டாக்கினார். 28 ரன்களில் ஜடேஜா வெளியேறியதைத் தொடர்ந்து ஸ்ரீகர் பரத் களமிறங்கினார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்