இந்திய பொருட்களுக்கு 27% இறக்குமதி வரி விதித்த டொனால்ட் டிரம்ப்

காணொளிக் குறிப்பு,
இந்திய பொருட்களுக்கு 27% இறக்குமதி வரி விதித்த டொனால்ட் டிரம்ப்
பிரசுரிக்கப்பட்டது

அமெரிக்கா உடனான வர்த்தக கொள்கைகளைப் பொருத்தவரை, இந்தியா மிகவும் கடினமாக நடந்துகொள்வதாகவும் டிரம்ப் தெரிவித்தார்.

இந்திய சந்தையில் அமெரிக்க இறக்குமதிகள் போட்டியிடுவதை இந்தியாவின் வர்த்தகக் கொள்கைகள் மிகவும் கடினமாக்குவதைக் குறிப்பிட்ட அவர், "இந்தியா மிக மிக மோசம். பிரதமர் மோதி சமீபத்தில் இங்கு வந்து சென்றிருந்தார். அவர் ஒரு சிறந்த நண்பர்.

நான் அவரிடம் கூறினேன், நீங்கள் என் நண்பர்தான். ஆனால், நீங்கள் எங்களை சரியாக நடத்தவில்லை. அவர்கள் 52% இறக்குமதி வரி விதிக்கிறார்கள். நாம் பல ஆண்டுகளாகவும், பல தசாப்தங்களாகவும் அவர்களுக்கு இறக்குமதி வரி விதிக்கவில்லை" என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ்நியூஸ்ரூம் வெளியீடு