கோவை: தோட்டத்து வீட்டில் ஆடுகளை வேட்டையாடிய சிறுத்தை

காணொளிக் குறிப்பு,
கோவை: தோட்டத்து வீட்டில் ஆடுகளை வேட்டையாடிய சிறுத்தை
பிரசுரிக்கப்பட்டது

கோவையில் உள்ள ஓணாப்பாளையம் பகுதியில் ஒரு வீட்டின் தோட்டத்தில் அதிகாலை ஆடுகளை சிறுத்தை ஒன்று கவ்விக் கொன்றது.

57 வயதான வெண்ணிலா என்பவரது 5 ஏக்கர் பரப்பளவில் உள்ள தோட்டத்தில் 8 ஆடுகள் கயிற்றின் மூலம் கட்டப்பட்டிருந்தன.

இந்த நிலையில் மார்ச் 1ஆம் தேதி அன்று அதிகாலை 1 மணி அளவில், இந்த தோட்டத்துக்கு அருகே உள்ள வனப் பகுததியில் இருந்து வெளியே வந்த சிறுத்தை அங்கிருந்த ஆடுகளை ஒவ்வொன்றாக கழுத்தை கவ்வி பிடித்து வேட்டையாடி உள்ளது.

இதன் பிறகு என்ன நடந்தது? கூடுதல் விவரங்கள் காணொளியில்...

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)