You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: மண் சரிவால் கடும் பாதிப்பை சந்தித்த கிராமத்தின் தற்போதைய நிலை என்ன?
அலவத்துகொடை - ரம்புக்கேஹெல்ல பகுதியில் நேற்று முன்தினம் இரவு பாரியதொரு மண்சரிவு சம்பவம் ஏற்பட்டது. இதில் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் மீட்புப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கண்டி - மாத்தளை பிரதான வீதியின் அலவத்துகொடை நகர் பகுதியிலிருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவிலேயே இந்த கிராமம் அமைந்துள்ளது.
இந்த இடத்தில் சுமார் 14 வீடுகள் மண்ணுக்குள் புதையுண்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். சுமார் 40 பேர் வரை அந்த வீடுகளில் வாழ்ந்து வந்துள்ளதாகவும் பிரதேச மக்கள் கூறுகின்றனர்.
எனினும், போலீஸார் மற்றும் கிராம சேவகரின் மதிப்பீட்டில் அந்த விடயம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. வீடுகள் மாத்திரமன்றி, வீடுகளிலிருந்து வாகனங்கள் கூட மண்ணுக்குள் புதையுண்டுள்ளன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு