ஆஸ்திரேலியா செய்த மேஜிக்; இந்திய தோல்விக்கு யார் காரணம்? – வீடியோ

ஆஸ்திரேலியா செய்த மேஜிக்; இந்திய தோல்விக்கு யார் காரணம்? – வீடியோ
பிரசுரிக்கப்பட்டது

ஆமதாபாத்தில் நேற்று (நவம்பர் 19) நடந்த உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி சற்று தடுமாற்றத்துடனே ஆடியது.

100 ரன்களை எட்டுவதற்குள்ளாக 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இந்திய அணியை கோலி - லோகேஷ் ராகுல் ஜோடி காப்பாற்றியது.

ஆனாலும் அந்த ஜோடியும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. இந்திய அணி 240 ரன்களில் ஆல் அவுட்டானது.

அதனைத் தொடரந்து இந்தியா நிர்ணயித்த 241 ரன் இலக்கை டிராவிஸ் ஹெட் சதத்தின் உதவியுடன் ஆஸ்திரேலிய அணி எளிதாக எட்டியது.

20 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா இறுதிப் போட்டியில் மீண்டும் ஒருமுறை ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை சந்தித்துள்ளது.

இது குறித்து தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் விமர்சகர் கிரிக்கானந்தாவிடம் பிபிசி தமிழ் நேர்காண்ல் நடத்தியது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)