மூன்று மீட்டர் தொலைவில் பள்ளத்தை பார்த்த போது என்ன செய்தது பிரக்யான் ரோவர்?
மூன்று மீட்டர் தொலைவில் பள்ளத்தை பார்த்த போது என்ன செய்தது பிரக்யான் ரோவர்?
பிரசுரிக்கப்பட்டது
நிலாவில் விக்ரம் லேண்டரிலிருந்து தரையிறங்கியுள்ள பிரக்யான் ரோவர் தனது இலக்குகளை ஒவ்வொன்றாக அடைந்து வருகிறது. நிலவில் ஆக்சிஜன் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ள பிரக்யான், தொடர்ந்து பணிகளை மேற்கொள்ளும் போது மூன்று மீட்டர் தொலைவில் ஒரு பள்ளத்தை பார்த்தது.
பார்த்தவுடன் சுதாரித்துக் கொண்டு மாற்று பாதையில் செல்லும் திறன் இருந்ததால், அதன் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. நிலாவில் ஆக்சிஜன் இருப்பதால், மனிதன் அங்கே உயிர் வாழ முடியுமா, விண்கலன்களுக்கு அது எரிபொருளாக முடியுமா என்ற கேள்விகள் பல தொடங்கிவிட்டன. இவை எல்லாவற்றுக்கும் விடை தேடும் வகையில், பிரக்யான் ரோவர் தொடர்ந்து தனது பணிகளை மேற்கொண்டு வருகிறது.

பட மூலாதாரம், ISRO
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



