பாலத்துக்கு அடியில் பார்க் - சென்னையை கலக்கும் இந்த பூங்காவில் அப்படி என்ன இருக்கிறது? - காணொளி

காணொளிக் குறிப்பு, பாலத்துக்கு அடியில் பார்க் - சென்னையை கலக்கும் இந்த பூங்காவில் அப்படி என்ன இருக்கிறது?
பாலத்துக்கு அடியில் பார்க் - சென்னையை கலக்கும் இந்த பூங்காவில் அப்படி என்ன இருக்கிறது? - காணொளி
பிரசுரிக்கப்பட்டது

சென்னை மாநகராட்சியை அனைத்து வசதிகளிலும் மேம்படுத்த சிங்கார சென்னை 2.0 திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தத் திட்டத்தின் கீழ் நட்புமிகு சென்னை, பசுமை சென்னை, தூய்மை சென்னை, நீர் மிகு சென்னை, எழில் மிகு சென்னை, நலமிகு சென்னை, பாதுகாப்பான சென்னை, கல்வியில் சென்னை, சீர் மிகு சென்னை, கலாசாரம் மிகு சென்னை உள்ளிட்டவை மூலம் சென்னை மாநகராட்சியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இத்திட்டங்களின் ஒரு பகுதியாக ரயில்வே மேம்பாலங்களுக்கு கீழ் உள்ள பகுதிகளை உபயோகமானதாக உருவாக்கவும், அங்கு பொதுமக்கள் தங்களின் நேரத்தை மகிழ்ச்சியாக செலவழிக்கும் வகையிலும் பூங்காக்கள் மற்றும் Train நடைபாதைகள் அமைக்கப்பட்டுள்ளது.

சுற்றுப் பகுதிகளில் இருக்கும் மக்கள் தங்கள் குழந்தைகளுடன் மாலை நேரங்களில் இந்த பூங்காக்களை பயன்படுத்துகின்றனர்.

குழந்தைகளும் பல பகுதிகளில் இருந்து வருவதால் அவர்களுக்கும் இங்கு புதிய நட்பு உருவாகும் சூழல் இருக்கிறது.

பூங்கா மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த குழந்தைகளுக்கான விளையாட்டு பயிற்சிகளும் இங்கு மேற்கொள்ளப்பட்டுகின்றன.

சிலம்பம் , ஷட்டல் உள்ளிட்ட விளையாட்டுக்களுக்கான பயிற்சிகளும் இங்கு மேற்கொள்ளப்படுகின்றன., பெரியவர்கள் நடைபயிற்சியை மேற்கொள்வதற்கான நீண்ட நடைபாதைகளும் அமைக்கப்பட்டிருப்பது பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது.

ரயில்வே மேம்பாலங்களுக்கு கீழ் அமைக்கப்பட்டுள்ள இந்த பூங்காக்கள் மற்றும் நடைபாதைகள் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கு புது உற்சாகத்தை அளித்திருக்கிறது.

தயாரிப்பு - ஹேமா ராகேஷ்

ஒளிப்பதிவு, படத்தொகுப்பு - ஜனார்த்தனன்

பூங்கா, சென்னை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: