காணொளி: சங்கிலி பறிப்பில் இருந்து சாமர்த்தியமாகத் தப்பிய பெண்

காணொளி: சங்கிலி பறிப்பில் இருந்து சாமர்த்தியமாகத் தப்பிய பெண்
பிரசுரிக்கப்பட்டது

கன்னியாகுமரியில் சங்கிலியை பறிக்க முயன்ற திருடனின் பிடியில் இருந்து பெண்ணொருவர் சமர்த்தியமாகத் தப்பிச் செல்லும் காட்சிகள் இவை.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள நேசமணி நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் , பெண் ஒருவர் நடந்து சென்றுள்ளார். அப்போது ஹெல்மெட் அணிந்தபடி அவரை பின்தொடர்ந்து வந்த நபர் அப்பெண்ணை கீழே தள்ளிவிட்டு அவர் அணிந்திருந்த சங்கிலியை பறிக்க முயன்றுள்ளார்.

அவரின் பிடியில் சிக்காமல் தப்பிய பெண் கூச்சலிட்ட நிலையில் சங்கிலி பறிப்பில் ஈடுபட முயன்ற நபர் உடனடியாக தனது இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து சென்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு