You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
BBC தமிழ் இணையதளத்தில் கடந்த சில நாட்களில் வெளியான, நீங்கள் கட்டாயம் படிக்க வேண்டிய செய்திகள்
வணக்கம் நேயர்களே! இந்த வாரம் உங்களுக்கு அருமையானதாக அமைந்திருக்கும் என்று நம்புகிறோம். இந்த வாரம் உலகமெங்கும் பல்வேறு விடயங்கள் நடந்தன, அவற்றை நாங்கள் தனித்தனி செய்திகளாக வெளியிட்டிருந்தோம். எனினும், நீங்கள் அவற்றில் சில முக்கியமான செய்திகளை தவற விட்டிருக்கலாம்.கவலை வேண்டாம். உங்களுக்காகவே இந்த வாரத்தில் வெளியான ஐந்து சிறப்பு கட்டுரைகளின் துணுக்குகளை இங்கே ஒரே இடத்தில் தொகுத்தளிக்கிறோம். நீங்கள் விரும்பும் கட்டுரையை அதற்கு கீழே உள்ள இணைப்பில் கிளிக் செய்து முழுவதும் படிக்க முடியும். பிபிசி தமிழில் நாங்கள் எப்போதுமே செய்திகளை மாறுபட்ட கோணத்தில் அளிப்பதுடன், ட்ரெண்டில் உள்ள செய்திகளை கலவையாக அளித்து வருவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
அந்த வகையில் இந்த வாரம், 'ஆளுநரின் செயல்பாடுகள் தமிழக பா.ஜ.கவுக்கு பலனளிக்குமா?,மண்ணுக்குள் புதையும் ஜோஷிமட் நகரம் - 20 ஆயிரம் பேரை காப்பாற்ற முடியுமா?, பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் பாகிஸ்தான், மரத்திலிருந்து உருவாகும் பேட்டரிகள் - மின்சார வாகனங்களில் பயன்படுத்த முடியுமா?, வாரிசு, துணிவு: பொங்கல் போட்டியில் வெற்றி பெற்றது யார்? ஆகிய ஐந்து கட்டுரைகளை இங்கே தொகுத்தளித்துள்ளோம்.
ஆளுநரின் செயல்பாடுகள் தமிழக பா.ஜ.கவுக்கு பலனளிக்குமா?
தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆளுநர் உரையின் சில பகுதிகளை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி தவிர்த்துவிட்டு வாசித்ததும், அதைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொண்டுவந்த தீர்மானமும் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன. ஆளுநரின் செயல்பாடுகள், அவரது நோக்கம், மாநில அரசியலில் ஆளுநரின் செயல் ஏற்படுத்தும் தாக்கம் ஆகியவை குறித்து தி இந்து குழுமத்தின் இயக்குநர்களில் ஒருவரான என். ராம், பிபிசி தமிழிடம் பேசினார். விரிவாக அறிய லிங்கை க்ளிக் செய்யுங்கள்.
மண்ணுக்குள் புதையும் ஜோஷிமட் நகரம் - 20 ஆயிரம் பேரை காப்பாற்ற முடியுமா?
உத்தராகண்ட் மாநிலத்தில் இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ள சிறிய மலை நகரமான ஜோஷிமட்டில் உள்ள தனது வீட்டில் ஜனவரி 2ஆம் தேதி அதிகாலையில் கேட்ட பெரும் சத்தம் பிரகாஷ் பூட்டியாலை தூக்கத்தில் இருந்து எழுப்பியது. என்ன நடக்கிறது? படிக்க லிங்கை க்ளிக் செய்யவும்.
உணவுக்காக சண்டையிடும் மக்கள்: பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் பாகிஸ்தான் – என்ன நடக்கிறது?
பாகிஸ்தான் தொடர்பான பல வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. பெரும்பாலான வீடியோக்களில் மக்கள் கோதுமை மாவு மற்றும் ரொட்டிக்காக ஒருவருக்கொருவர் சண்டையிடுகிறார்கள்.பாகிஸ்தானின் பொருளாதார அவல நிலை மற்றும் விலைவாசி உயர்வின் அளவைக் காட்ட இந்த வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. விரிவாக அறிய லிங்கை க்ளிக் செய்யவும்.
மரத்திலிருந்து உருவாகும் பேட்டரிகள் - மின்சார வாகனங்களில் பயன்படுத்த முடியுமா?
மின்சார வாகனங்களுக்கான தேவை அதிகரித்து வருவதால், விஞ்ஞானிகள் நிலையான பேட்டரிகளை தயாரிப்பதற்கான பொருட்களைத் தேடுகின்றனர். மரங்களில் காணப்படும் லிக்னின் என்ற பொருள், ஒரு வலுவான போட்டியாளராக உருவெடுத்து இருக்கிறது. முழுமையாக அறிய லிங்கை க்ளிக் செய்யுங்கள்.
வாரிசு, துணிவு: பொங்கல் போட்டியில் வெற்றி பெற்றது யார்?
வாரிசு – துணிவு ஆகிய இரு படங்களும் வெளியாகி ஒரு நாள் கடந்துள்ள நிலையில் யார் வெற்றிப் பெற்றார்கள் என விஜய், அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் விவாதித்து வருகின்றனர். இருவரின் ஆதிக்கம் செலுத்தியது யார்? தெரிந்துகொள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.