You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பிகாரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளதா? பிரதமரின் கூற்று உண்மையா?
நாட்டின் பல்வேறு இடங்களில் புதிய அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனங்கள் அதாவது 'எய்ம்ஸ் மருத்துவமனைகள்' திறக்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோதி கடந்த வாரம் கூறியிருந்தார்.
இதுதொடர்பாக பிரதமர் மோதி பேசியபோது, "அசாமின் கௌஹாத்தி முதல் மேற்கு வங்க மாநிலம் கல்யாணி வரையிலும், ஜார்கண்டில் உள்ள தியோகர் முதல் பிகாரில் உள்ள தர்பங்கா வரையிலும் சிறந்த சுகாதார வசதிகளுடன், மக்கள் சிகிச்சை பெறும் வகையில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகள் திறக்கப்பட்டுள்ளன.
எனவே, நோயாளிகள் மருத்துவ சிகிச்சைக்காக நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்கள் செல்ல வேண்டியதில்லை" என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில், பிகார் மாநிலம் தர்பங்கா மாவட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது தொடர்பான அரசியல் சூடுபிடித்துள்ளது.
எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக பிரதமர் மோதி தவறான தகவலை கூறியிருப்பதாக ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்