கள்ளச்சாராய மரணம் குறித்து அதிமுக எம்.எல்.ஏ-க்கள் சட்டப்பேரவையில் அமளி - காணொளி
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 47 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவையிலும் இந்த விவகாரம் பலமாக எதிரொலித்தது.
சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று (ஜூன் 21) தொடங்கியது. இதில் பங்கேற்க வந்த அ.தி.மு.க, பா.ம.க எம்.எல்.ஏ-க்கள் கள்ளக்குறிச்சி சம்பவத்தைக் கண்டித்துக் கருப்புச் சட்டை அணிந்து வந்திருந்தனர்.
பேரவை துவங்கியதும் இந்த விவகாரம் தொடர்பாக கவன ஈர்ப்புத் தீர்மானத்தையும் அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் கொண்டுவந்தன. தொடர்ந்து கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் எனக்கோரி கோஷம் எழுப்பிய அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் ஆர்.பி.உதயகுமார் சட்டப்பேரவையில் இருந்து குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



