நலமுடன் இருக்கிறேன் - வீடியோ வெளியிட்ட ஈவிகேஎஸ் இளங்கோவன்
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நலம் குறித்து தவறான தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து, தான் நலமுடன் இருப்பதாக அவர் பேசும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.
காங்கிரஸ் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், கொரோனா தொற்றில் இருந்து விடுபட்டுள்ளார் என மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. ஆனால் இதயம் ரத்தத்தை பம்ப் செய்வதில் பிரச்னை இருப்பதால் Congestive Heart Failure-க்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் குறித்து உடல்நலன் குறித்து தவறான தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து, தான் நலமுடன் இருப்பதாக அவர் பேசும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. அதில் தான் நலமுடன் இருப்பதாகவும் விரைவில் டிஸ்சார்ஜ் ஆகிவிடுவேன் என்றும் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈ.வே.ரா உயிரிழந்ததையடுத்து, அவரது தந்தையும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இந்த நிலையில் திடீர் உடல்நலக்குறைவு மற்றும் கொரோனா தொற்று காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மார்ச் 15ம் தேதி அனுமதிக்கப்பட்டார்.

பட மூலாதாரம், twitter/Tamil Nadu Congress Committee
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



