பூஞ்ச் தாக்குதல்: அன்று தந்தை, இன்று மகன் - இரு உயிர்களை பலி கொடுத்த சோகத்தில் குடும்பம் (காணொளி)
பூஞ்ச் தாக்குதல்: அன்று தந்தை, இன்று மகன் - இரு உயிர்களை பலி கொடுத்த சோகத்தில் குடும்பம் (காணொளி)
பிரசுரிக்கப்பட்டது
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் நேற்று ராணுவ வாகனம் தீப்பிடித்து எரிந்ததில் 5 வீரர்கள் உயிரிழந்தனர். இதில் 4 பேர் பஞ்சாபை சேர்ந்தவர்கள்.
சில மணி நேரங்களுக்கு பின்னர், இது பயங்கரவாத தாக்குதல் என்று தெரிவித்த ராணுவம், பயங்கரவாதிகள் வீசிய கையெறி குண்டு வெடித்து வாகனம் தீ பிடித்து எரிந்தது என்று குறிப்பிட்டிருந்தது.
இந்த தாக்குதலில் ராஷ்ட்ரிய ரைஃபில்ஸ் பிரிவைச் சேர்ந்த 5 பேர் கொல்லப்பட்டனர். ஒருவர் காயமடைந்தார். இதில் உயிரிழந்த ஒரு வீரர் குடும்பத்தில் ஏற்கெனவே அவரது தந்தை கார்கில் போரில் பலியானது தெரிய வந்துள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



