You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கல்பனா சாவ்லா விருது பெற்றும்கூட இன்று வறுமையின் பிடியில் தவிக்கும் தீபா
தமிழ்நாட்டைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி விளையாட்டு வீராங்கனை தீபா(40) வறுமையின் பிடியில் சிக்கியுள்ளார்.
கடந்த 20 ஆண்டுகளில் விளையாட்டுத் துறையில் இந்தியாவை முன்னிறுத்தி சர்வதேச விளையாட்டு போட்டிகளில் தங்கம், வெள்ளி, வெண்கலம் என பல பதக்கங்களை வென்ற தடகள வீராங்கனையான இவர், தற்போது சென்னையில் ஒரு விடுதியில் சமையல் பணியாளராக வேலை செய்கிறார். தமிழ்நாடு அரசின் கல்பனா சாவ்லா விருதைப் பெற்ற முதல் பெண் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மறைந்த முதல்வர் கருணாநிதி 2010ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவில் வீரமங்கைக்கான கல்பனா சாவ்லா விருதை தீபாவுக்கு அளித்தார்.
தமிழ்நாட்டை முன்னிறுத்தி பல தேசிய போட்டிகளிலும், இந்தியாவை முன்னிறுத்தி சர்வதேச அளவிலான போட்டிகளிலும் ஊக்கத்துடன் பங்குபெற்று பதக்கங்களை வாங்கியபோதும், தனக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்கிறார்.
தன்னுடைய கல்வித் தகுதிக்கு ஏற்ப அரசு வேலை வழங்குவதாக அளித்த உறுதியை தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வேண்டும் என்பதே தீபாவின் தற்போதையை எதிர்பார்ப்பு.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்