You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அமெரிக்காவில் தொடரும் இந்திய மாணவர்களின் மரணம் – காணொளி
அமெரிக்காவின் ஜார்ஜியாவில் ஒரு மளிகைக் கடையில் வேலை செய்து கொண்டிருந்த விவேக் சைனி, கடந்த ஜனவரி 16-ஆம் தேதி ஒரு நபரால் அடித்துக் கொல்லப்பட்டார். விவேக் சைனி அலபாமா பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படித்து வந்தார்.
அதேபோல பர்த்யு பல்கலைக்கழகத்தில் படித்து வந்த நீல் ஆச்சார்யாவின் உடல் ஜனவரி 31ம் தேதி பல்கலைக்கழக வளாகத்தில் கண்டெடுக்கப்பட்டது. சமீப காலமாகவே அமெரிக்காவில் இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி, இந்த சம்பவங்கள் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம் அளித்தார். அவர், “வன்முறைக்கு மன்னிப்பே கிடையாது. அமெரிக்காவில் இனம், மதம் அல்லது பாலினம் அடிப்படையிலான வன்முறை முற்றிலும் ஏற்க முடியாதது. அதிபர் பைடன் மற்றும் அவரது அரசு, அதிகாரிகளுடன் இணைந்து இத்தகைய தாக்குதல்களை தடுக்கவும், நிறுத்தவும் அனைத்து சாத்தியமான முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது,” என்றார்.
அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் உள்ள இந்திய துணைத் தூதரகங்கள் உள்ளூர் நிர்வாகம் மற்றும் இறந்த மாணவர்களின் உறவினர்களுடன் தொடர்பில் உள்ளன. இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், இந்திய மாணவர்களின் இறப்புகள் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை அல்ல என்றார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)