பிபிசி 100 பெண்கள்: நீதிக்காக போராடும் மற்றொரு நிர்பயாவின் குடும்பம் - காணொளி
பிபிசி 100 பெண்கள்: நீதிக்காக போராடும் மற்றொரு நிர்பயாவின் குடும்பம் - காணொளி
பிரசுரிக்கப்பட்டது
16 டிசம்பர் 2012 அன்று கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, அதனால் ஏற்பட்ட காயங்களால் ஒரு மாணவி இறந்து 10 ஆண்டுகள் ஆகப் போகின்றன.
நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த வழக்குக்குப் பிறகு நிகழ்ந்த மாற்றங்கள் என்ன?
வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் நீதிக்கான போராட்டம் எளிதாகி விட்டதா?
இதைப் புரிந்து கொள்ள பிபிசி செய்தியாளர் திவ்யா ஆர்யா, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட பின்னர் நீதிக்காக போராடும் 13 வயது சிறுமியின் சகோதரரை சந்தித்தார். விரிவான தகவல் இந்த காணொளியில்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



