கஜகஸ்தானில் விமானம் தரையிறங்கும் போது விபத்து - என்ன நடந்தது? (காணொளி)

காணொளிக் குறிப்பு, கஜகஸ்தானில் விமானம் தரையிறங்கும் போது விபத்துக்கு உள்ளானது.
கஜகஸ்தானில் விமானம் தரையிறங்கும் போது விபத்து - என்ன நடந்தது? (காணொளி)
பிரசுரிக்கப்பட்டது

கஜகஸ்தானின் அக்டாவ் நகரில் 67 பேருடன் சென்ற விமானம் ஒன்று புதன்கிழமையன்று (25-12-2024) விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டஜன்கணக்கானோர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுவரை 25 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்தாகவும், அவர்களில் 22 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிப்பதாக கஜகஸ்தானின் அவசரகால அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நகருக்கு அருகே சென்ற போது தீப்பிடித்தது. விமானம் விபத்துக்குள்ளானதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை.

அஜர்பைஜான் ஏர்லைன்ஸின் இந்த விமானம், அஜர்பைஜான் தலைநகர் பாகுவிலிருந்து ரஷ்யாவின் க்ரோஸ்னி நகருக்கு சென்று கொண்டிருந்தது. பனிமூட்டம் காரணமாக அது பாதை மாறியிருப்பதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக வெளியான வீடியோ ஒன்றில், அந்த விமானம் லாண்டிங் கியர் கீழே உள்ளபடி அதிவேகமாக தரை இறங்க முயன்றமைத காண முடிகிறது. ரஷ்ய செய்தி ஊடகங்களில் வெளியான இந்த வீடியோவை ராய்ட்டர்ஸ் செய்தி முகமை சரிபார்த்து உறுதி செய்துள்ளது.

தரையிறங்க முயற்சிப்பது போல தோன்றிய சில நொடிகளில், விமானம் வெடித்து ஒரு பெரிய தீப்பிழம்பு உண்டானது.

முழு விவரங்கள் காணொளியில்...

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)