இஸ்ரேல் - ஹெஸ்பொலா மோதலை 2006-ஆம் ஆண்டு சண்டையுடன் ஒப்பிட முடியுமா? அப்போது என்ன நடந்தது?

இஸ்ரேல் - ஹெஸ்பொலா மோதலை 2006-ஆம் ஆண்டு சண்டையுடன் ஒப்பிட முடியுமா? அப்போது என்ன நடந்தது?
பிரசுரிக்கப்பட்டது

இஸ்ரேலுக்கு எதிரான மோதலில் சமீப வாரங்களாக ஹெஸ்பொலா கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. அந்த அமைப்பை சேர்ந்த பலர் பேஜர் மற்றும் வாக்கிடாக்கி வெடிப்புகளால் கொல்லப்பட்டனர். ஆனால், 2006-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் ஹெஸ்பொலா தனது பலத்தை வெகுவாக அதிகரித்துள்ளது.

இஸ்ரேலிடமும் மேம்பட்ட ஆயுதங்கள் உள்ளன. ஏவுகணைகளை இடைமறிக்கும் அயர்ன் டோம் அதனிடம் உள்ளது. ஆனால், 2006 போல் அல்லாமல் இந்த முறை காஸாவில் போரில் ஈடுபட்டுள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இந்த நெருக்கடி மிகப்பெரும் சண்டையாக மாறலாம் என்ற கவலை எழுந்துள்ளது.

பிபிசியின் சர்வதேச விவகாரங்கள் ஆசிரியர்,ஜெரிமி போவன், "இதற்கு முன்பும் லெபனானில் இஸ்ரேல் நுழைந்துள்ளது. கடந்த 1982-ம் ஆண்டில் இஸ்ரேல் படைகள் பெய்ரூட் வரை சென்றன. பின்னர் இஸ்ரேலின் லெபனான் கூட்டாளிகள் பெய்ரூட்டின் சப்ரா மற்றும் ஷாதிலா அகதிகள் முகாம்களில் பாலத்தீன மக்களை படுகொலை செய்தனர். இந்த நடவடிக்கை பரவலாக விமர்சிக்கப்பட்டதையடுத்து, இஸ்ரேல் ராணுவம் பின்வாங்க வேண்டியிருந்தது" என்கிறார்.

கடந்த 2006-ஆம் ஆண்டில் ஹெஸ்பொலா மற்றும் இஸ்ரேலுக்கு இடையே முழு வீச்சிலான போர் வெடித்தது. இது, எல்லை கடந்த ஹெஸ்பொலாவின் தாக்குதலால் தூண்டப்பட்டது.

எனினும், 2006-ல் இருந்து ஹெஸ்பொலா அதிகம் வளர்ந்துள்ளது. சிரிய போரில் சண்டையிட்டதன் மூலம் அனுபவம் பெற்றுள்ளது. இரான் ஆதரவுடன் அதன் ஆயுத பலம் பலமடங்கு உயர்ந்துள்ளது. இஸ்ரேலிடமும் மேம்பட்ட ஆயுதங்கள் உள்ளன. ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் 'அயர்ன் டோம்' என்ற வான் பாதுகாப்பு அமைப்பு அதனிடம் உள்ளது. ஆனால், 2006-ஆம் ஆண்டைப் போலல்லாமல் இந்த முறை காஸாவிலும் இஸ்ரேல் போரில் ஈடுபட்டுள்ளது.

முழு விவரம் காணொளியில்...

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)