சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்புவதில் மீண்டும் சிக்கல் - என்ன காரணம்?
இந்திய வம்சாவளி விண்வெளி வீரர் சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்புவதில் மீண்டும் தாமதம் ஏற்பட்டுள்ளது.
மார்ச் 13 அன்று, சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோரை அழைத்து வர, விண்வெளி வீரர்கள் அடங்கிய குழுவை அனுப்ப நாசா முடிவு செய்தது.
ஆனால் அந்தக் குழுவை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்புவதற்கான முயற்சி 45 நிமிடங்களுக்கு முன்பாக கைவிடப்பட்டதாக பிபிசியின் அமெரிக்க கூட்டாளி செய்தி நிறுவனமான சி.பி.எஸ். நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஏவுதள அமைப்பின் ஹைட்ராலிக் கரங்களில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த முயற்சி தற்போது கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வில்லியம்ஸ் மீண்டும் எப்போது பூமி திரும்புவார். முழு விபரமும் இந்த வீடியோவில்!
இந்த விவகாரம் தொடர்பாக மேல் அதிக தகவல்களை தெரிந்து கொள்ள
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



