காஸாவில் இரண்டு இலக்குகள் - நெதன்யாகு பேசியது என்ன?

காணொளிக் குறிப்பு, பணயக்கைதிகளை மீட்பது பற்றி நெதன்யாகு பேசியது என்ன?
காஸாவில் இரண்டு இலக்குகள் - நெதன்யாகு பேசியது என்ன?
பிரசுரிக்கப்பட்டது

இரானுடனான மோதலுக்கு பிறகு, இந்த சண்டை குறித்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கருத்து தெரிவித்துள்ளார்

''நம் இருப்புக்கே அச்சுறுத்தலாக இருந்த இரண்டு ஆபத்துகளை அகற்றியுள்ளோம். அவர்களின் பலவீனத்தைப் பயன்படுத்தி, குறிக்கோள்களை அடைந்து மிகவும் சிறப்பாகச் செயல்பட்டுள்ளீர்கள். தாக்குதலிலும், பாதுகாப்பிலும் நாம் முன்னணியில் இருந்ததை பார்த்தேன். தொழில்நுட்பத்தைக் கண்டு வியப்படைந்தேன். இந்த வெற்றியைத் தொடர்ந்து பல வாய்ப்புக்கான கதவுகள் தற்போது திறக்கப்பட்டுள்ளது உங்களுக்குத் தெரியும். முதலாவதாகப் பணயக் கைதிகளை மீட்பது. நிச்சயமாக, காஸா பிரச்னையைத் தீர்ப்பதும், ஹமாஸை தோற்கடிப்பதும் அவசியம். இந்த இரண்டு இலக்கையும் நாம் எட்டுவோம் என மதிப்பிடுகிறேன்'' என்கிறார் பெஞ்சமின் நெதன்யாகு.

மேலும் அவர், ''அதைத் தாண்டியும், பிராந்திய அளவிலான பல வாய்ப்புகள் திறக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் பெரும்பாலானவற்றில், சொல்லப்போனால் அனைத்திலும் நீங்கள் பங்கு வகிக்க உள்ளீர்கள். இஸ்ரேலின் இருப்பை உறுதி செய்வதற்கு நீங்கள் ஆற்றிய பங்களிப்பிற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்'' என்றார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு