காணொளி: காஸாவை ஆக்கிரமிக்க இஸ்ரேல் முடிவு - கொந்தளித்த இஸ்லாமிய நாடுகள்

காணொளிக் குறிப்பு, காஸா
காணொளி: காஸாவை ஆக்கிரமிக்க இஸ்ரேல் முடிவு - கொந்தளித்த இஸ்லாமிய நாடுகள்
பிரசுரிக்கப்பட்டது

காஸாவில் ராணுவ நடவடிக்கையை மேலும் தீவிரப்படுத்த இஸ்ரேல் முடிவு செய்துள்ளது. இதற்கு நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் பலத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. பல நாடுகள் இஸ்ரேலின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

இஸ்ரேலின் இந்த முடிவு, மனிதாபிமான நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தும் என்று இஸ்லாமிய நாடுகள் எச்சரித்துள்ளன.

செளதி அரேபியா, பாகிஸ்தான், கத்தார், குவைத் மற்றும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (OIC) உள்ளிட்ட பல நாடுகள் இஸ்ரேலின் இந்த எண்ணத்தை சர்வதேச சட்ட மீறல் என்றும், இரு நாட்டு தீர்வுக்கு தடையாக இருக்கும் என்றும், பாலத்தீன மக்களின் உரிமைகள் மீதான நேரடி தாக்குதல் என்றும் கூறியுள்ளன.

இஸ்ரேலின் இந்த முடிவை இஸ்லாமிய நாடுகள் எப்படி பார்க்கின்றன? இது தொடர்பாக அவர்கள் தெரிவித்த கருத்தை இந்த காணொளியில் பார்க்கலாம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு